மாற்றுமதத்தினர் வாழும் மஹரகமவில், அல்லாஹ்வின் விருப்பம்...!
-இக்பால் அலி-
கொழும்பில் வாழும் முஸ்லிம்களுடைய குழும்ப வாழ்க்கை முறை மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே காணப்படுகின்றது. வெறுமனே பலகை பெட்டிகளால் அடிக்கப்பட்ட வீடுகளிலேதான் அவர்கள் இன்னும் நவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையான கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான சூழலும் சந்தர்ப்பங்களும் இல்லாத நிலைமை இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். எனவே அந்த அடிப்படையில் கொழும்பில் மஹரகமவில் அமைந்துள்ள கபூரிய்யா அரபுக் கல்லூரி இவ்வாறு துன்பப்பட்டுக் கொண்டு வாழும் கொழும்பு வாழ் மக்களுக்கு நேசக் கரம் கொண்டு உதவி செய்யும் திட்டத்துடன் பயணிக்கவுள்ளதாக மஹரகம அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஎன்று அஷ்ஷெ;யக் ஜே. எம். இம்ரான் தெரிவித்தார்.
இன்று கொழும்பு மாவட்டம் முஸ்லிம்களுடைய கல்வித் துறையில் பாரிய வீழ்ச்சி கொண்ட பகுதியாகும். இதனால் இந்தப் பகுதி முஸ்லிம்களுடைய சமூக , பொருளாதார, பண்பாட்டு கலாசார அம்சங்கள் யாவும் மிகவும் கவலைக்கிடமாகவுள்ளன. இன்று சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் 20 விகிமாணவர்கள் உள்ளனர். இதில் முஸ்லிம்களே கணிசமாளவு இருக்கின்றார்கள். அதேபோன்று போதைப் பொருள் பாவனைக்கு உட்பட்டவர்களாக கணிசமாளவு முஸ்லிம்களே இருக்கின்றார்கள் என்ற புள்ளி விபரங்கள் சுட்டி காட்டுகின்றன. இந்தச் செய்தி முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை கவலை தரும் செய்தியாகும். கறை படிந்த செய்தியை இல்லாமற் செய்வதற்காக இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் அரபுக் கல்லூரிகளும் முன்வருதல் வேண்டும்.
மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்ட அஷ்ஷெய்க் உமர் அப்துல் அஸீஸ் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் கல்லூரிக்கான புதிய பணிப்பாளராக அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரானை நியமிக்கும் நிகழ்வும் புதிய மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு கல்லூரியில் 10-01-2016 அதிபர் அஷ்ஷெய்க் ஏ. ஆர். எம். மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பணிப்பாளர் பொறுப்பை ஏற்றுகொண்டு சிறப்புரையாற்றிய அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரான் இவ்வாறு அங்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
மஹரகம கபூரிய்யா என்பது பற்றிய தகவல்களை அறியாமல் நீங்கள் எவரும் இருக்க முடியாது. இந்தக் கல்லூரி 1931 ஆம் இந்தக் கல்லூரி உருவாக்கப்பட்டது. எமது சமூகத்திலே சேவையாற்றக் கூடிய உலமாக்களை , தலைவர்களை, புத்திஜீவிகளை இந்தக் கல்லூரி உருவாக்கி இருக்கிறது. தேசிய வானொலியில் முஸ்லிம் சேவைப் பிரிவில் முதன் முதலாக அரபு மொழியில் செய்தி வாசிக்கப்பட்டது என்றால் இந்த கல்லூரி ஈன்றெடுத்த மர்ஹும் அப்துர் ரஹ்மான் றூஹுல் ஹக் அவர்கள் ஆவர். இன்று சமூகத்தியில் இருக்கக் கூடிய ஜம்மிய்யதுல் உலமா சபை உருவாக்கப்படுவதற்கும் பிரகாசமளிப்பதற்கு இந்த கபூரிய்யாவில் கற்றவர்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றார்கள். மர்ஹும் ரியாழ் கபூரி அஷ்ஷெய்க் முபாரக், சபாப் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஜம்மிய்யதுல் உலமாவின் உப செயலாளராக அஷ்ஷெ;ய்க் தாசிம் கடமை புரிந்து கொண்டு இருக்கின்றார்கள். சமீபத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சூறா சபையின் தோற்றத்திற்கு எனக்கும் தாசிம் மௌலவிக்கும், அஷ்ஷெய்க் சியாத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. அவர்கள் தற்போது சமூகத்திற்கு பாரிய பங்களிப்பைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஏனைய நிறுவனங்களை எடுத்துக் கொண்டாலும் சரி சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பாக இருந்தாலும் சரி அதேபோன்று இலங்கைக்கான சவூதி அரேபிய்யாவின் ஜித்தா தூதுவராலயத்தின் முதல் செயலாளர் என்ற வகையிலும் சரி எமது கல்லூரியில் கற்ற ஜரூக் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட பாரிய பொறுப்புகளை சமூகத்திலே சுமந்தவர்கள்தான். இந்த கபூரிய்யாவில் கற்ற மாணவர்கள் என்று சொல்ல வேண்டும்.
இந்த கபூரிய்யா அரபுக் கல்லூரி 1931 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சமூகத்திற்கு பாரிய சேவையை செய்து கொண்டு இருந்தது. இடைக்காலத்தில் கல்வித் துறையில் வீழ்ச்சி கண்ட போது எமக்கு அதிபராக இருந்த அஷ்ஷெய்க் முபாரக் அவர்கள் அதே போன்று இன்று அதிபராக இருக்கக் கூடிய மஹ்ரூப் ஹஸ்ரத் அவர்கள் இன்னும் இறையடி சேர்ந்த இம்ரான் ஹஸ்ரத் அவர்கள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தக் கல்லூரியை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிலுள்ள பிரபல்யமான அரபு பல்கலைக்கழகங்களுக்கு இந்தக் கல்லூரியிலுள்ள மாணவர்களை அனுப்பி அவர்கள் கல்வித் துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குவதற்கு உதவி செய்துள்ளார்கள்.
அந்தப் பிரதிபலன் காரணமாகத்தான் நாங்கள் வெளிநாடுகளில் படித்து இன்று இந்தக் கல்லூரிக்கு பணிகள் செய்யக் கூடிய வகையில் உருவாகியுள்ளோம். இந்த கபூரிய்யா இமைந்திருக்கின்ற இடம் ஒரு முஸ்லிம் கிராமல்ல. ஏனைய இடங்களை எடுத்துக் கொண்டால் முஸ்லிம் கிராமங்களிலே மத்ரஸாக்கள் அமைக்கப்பட்டிருக்கும். மத்ரஸாவுக்கு சாப்பிடுவதற்கு ஏதும் இல்லையெனில் அந்த ஊரிலே இருக்கின்ற புத்திஜீவிகள், தனவந்தர்கள், அந்த செல்வம் படைத்தவர்கள் உடனடியாக வந்து மத்ரஸாவுக்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால் இந்த கபூரிய்யாவைப் பொறுத்த வரையில் அவ்வாறு ஊர் மக்கள் உதவி செய்வார்கள் என்ற நிலையில் இந்த மத்ரஸா அமையவில்லை. சுற்று வலைத்து இருப்பவர்கள் யாவரும் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள்.
எனவே இந்த இடத்தில் கபூர் ஹாஜயாருக்கு நல்ல சிந்தனை வழங்கி 35 ஏக்கர் நிலத்தை வக்பு செய்து ஒரு மத்ரஸாவை உருவாக்கியுள்ளார் என்றால் அந்நியவர்கள் வாழும் இந்த இடத்தில் எமது கல்வியுடைய பிரகாசம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ்வுதஆலா விரும்பியுள்ளான். துரதிருஷ்மாக இந்த கபூரிய்யா மத்ரஸாவைப் பாதுகாப்பதில் முபாரக் ஹஸ்ரத் மஹ்ரூப் ஹஸ்ரத் காலஞ்சென்ற றூஹுல் ஹஸரத். செய்யத் அஹமட் ஹஸரத் உள்ளிட்டவர்கள் இந்த கல்லூரியின் வளர்ச்சிக்காகத் தியாகத்துடன் செயற்பட்டுள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுடைய வரலாற்றில் கபூர் ஹாஜியாரின் பணியை எவராலும் மறுக்கவோ முறைக்கவோ முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கபூரியா அரபுக் கல்லூரியின் சமுதாய அக்கறை ஏனைய கல்லூரிகள்,மதரசாக்களுக்கும் வர வேண்டும்.
ReplyDeleteவெறுமனே பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் பயான்கள் மட்டும் பெரியளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக செயற் திறன்மிக்க ஆக்கபூர்வமான காலத்திற்கு ஏற்ற வகையில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் கபூரியா கல்லூரியின் முன் வருகையை பாராட்டுகிறோம்.
numerous mistakes in the essay
ReplyDelete