"ஆண்களின் வீட்டில் வாழும் பெண்கள்" நடைமுறை வெற்றிபெற்றால், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு..!
வெளிநாடு செல்லும் பெண்களை இவ்வாறு வகை படுத்துவோம்
1-திருமணமாகாத இளம் பெண்கள்
2-அதிக பெண் பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள்
3-விவாகரத்து பெற்ற பெண்கள்
4-விதவை பெண்கள்
5-உழைக்க முடியாத சுகயீனமுற்ற கணவனை கொண்ட பெண்கள்
6-ஒண்டுக்கும் உதவாத சோம்பேறி கணவனை கொண்ட பெண்கள்
தடுப்பதற்கான தீர்வுகள் என்ன ?
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு வாழ வேண்டும் என்று அல்லாஹ் பல வழிமுறைகளை ஏற்படுத்தி தந்துள்ளான் .அதன் பிரகாரம் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வை அமைத்து கொண்டால் பிற மனிதர்களும் நிம்மதியாக வாழ்வார்கள்
அந்த வகையில் அல்லாஹ்வின் கட்டளைகளில் ஒன்று தான் மஹர் கொடுத்து பெண்களை திருமணம் செய்யுங்கள்.அத்தோடு நீங்கள் குடியிருக்கும் இடத்தில் அவர்களை குடி அமர்த்தி கொள்ளுங்கள்.
ஆனால் கிழக்கை பொறுத்த வரையில் இவ்விரு கட்டளைகளும் நிராகரிக்க பட்டு மஹராக வெறும் 1001 ரூபாவை கொடுத்து விட்டு பெண்ணுடன் விலை மதிக்க முடியாத குடும்பத்தின் ஓரே சொத்தான வீட்டையும் எடுத்து கொண்டு பணமும் பெற்று கொள்வதே இது வரையில் நடை முறையில் உள்ள திருமண முறை ஆகும்.
இத் திருமண முறை மாற்றபட்டு ஆண்கள் வீட்டில் பெண்கள் வாழும் சூழ்நிலை உருவாக்க பட்டால் மாத்திரமே இளம் பெண்களும் ,அதிக பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்களும் வெளிநாடு செல்வதை தடுக்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் விளங்கி கொள்ள வேண்டும்.
இது தவிர விவாகரத்து பெற்ற பெண்கள் அதிகமாக வெளிநாடுகளை நோக்கி பயணிக்க முக்கிய காரணம் கணவன் தனக்கு 5 குழந்தைகள் இருந்தாலும் அப் பெண்ணையும் குழந்தைகளையும் நிர்க்கதியான சூழலில் விட்டு விட்டு மாதமொன்றுக்கு வெறும் 4000-8000 ரூபாய்க்குள் பணம் செலுத்துவதாக நீதி மன்றத்தில் உடன் பட்டு விட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டு தனக்கும் தன் குழந்தைகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று சென்று விடுவதாகும்.
இதனால் தனது முன்னால் கணவனால் கொடுக்க படுகின்ற பணம் தன் குழந்தைகளை பராமரிக்கவும் பெண் பிள்ளைகள் இருந்தால் வீடு கட்டவும் முடியாத காரணத்தினால் அப் பெண் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது
ஒரு கணவன் மனைவிக்கு இடையில் விவாகரத்து நடந்து விட்டால் அவனது சகல குழந்தைகளையும் பராமரிக்கும் செலவை கணவனே பொறுப்பேற்று கொள்ள வேண்டும் .
இல்லையெனில் பிள்ளைகளை கணவன் தான் தன் வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும் என்ற சட்டம் கட்டாயமாக்கப்பட்டால் மாத்திரமே விவாகரத்து குறையும்.அத்தோடு பிள்ளைகளை உதறி தள்ளி விட்டு செல்லும் கணவன் மார்களுக்கு பாடமாகவும் அமையும் அதுமட்டுமன்றி விவாகரத்து பெற்ற பெண்கள் வெளிநாடு செல்லுவது குறைக்க பட்டு வேறொரு திருமணம் செய்ய கூடிய சூழ்நிலை உருவாக்க படும்
சுகயீனமுற்ற கணவனை கொண்ட மனைவிகளுக்கு ஸக்காத்/வசதி படைத்தவர்கள் உதவி செய்யும் போதும் அவர்களும் வெளிநாடு செல்லாமல் சுய தொழில் ஒன்றை செய்து கொண்டு வாழ முடியும்
சோம்பேறி கணவனை கொண்ட பெண்களின் நிலை கவலைக்குரியது இவர்கள் தான் தன் கணவன் தொடர்பாக சரியான முடிவு எடுக்க வேண்டும்.
அடுத்து விதவை பெண்கள் இவர்களின் விடயத்தில் சமூகம் அக்கறை காட்ட வேண்டும்.
விதவைகளுக்கு வாழ்வு கொடுக்க முன் வர வேண்டும்.இவர்களுக்கு சேர வேண்டிய சொத்து சரியான பங்கீடு செய்யப் பட்டால் இவர்களும் வெளிநாடு செல்லாமல் வாழ முடியும் விதவைகளை பற்றி விரிவான தலைப்பில் இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்.
எனவே சகல பிரச்சினைகளுக்கு தீர்வு ஆண்களின் வீட்டில் பெண்கள் வாழும் திருமணம் முறை நடைமுறைபடுத்த பட்டால் மாத்திரமே சாத்திய படும். இல்லையெனில் ஒவ்வொரு வருடமும் பெண்கள் வெளிநாட்டுக்கு செல்வது அதிகரிக்க படுமே தவிர குறைவடையாது.
Post a Comment