Header Ads



தொழுகை முடிந்து வீடுதிரும்பியவர்கள் மீது தாக்குதல், ஜனாதிபதியிடம் பிரஸ்தாபிப்பேன் - ரிசாத் பதியுதீன்

வெல்லம்பிட்டியில் தொழுகை முடிந்து வீடு திரும்பிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். 

நேற்று (௦7/ ௦1/ 2௦16) இரவு நடந்த இந்த சம்பவத்தை கேள்வியுற்ற அமைச்சர் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு இவ்வாறான சம்பவங்களை மேலும் தொடரவிடாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொல்வத்தை பள்ளிவாசல் நிர்வாகஸ்தர்களுடன் அமைச்சர் தொடர்புகொண்டு உண்மை நிலையை அறிந்துகொண்டார்.

இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்கும்போது இதனை பிரஸ்தாபித்து ஆவன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் பள்ளி  நிர்வாகிகளிடம் உறுதியளித்தார். 

இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவை நாட்டு மக்கள் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான தீய நடவடிக்கைகளுக்கு நாம் இடமளிக்க கூடாது. கடந்த காலங்களிலும் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பேதங்களை உருவாக்கி அதில் குளிர்காய சில சக்திகள் முயற்சித்தன. எனினும் அதில் அவர்களுக்கு பாரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. எனவே இந்த வேளையில், நாம் அவதானமாக நடந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. My3 will do nothing but Risadh will be become a "Hero".

    ReplyDelete

Powered by Blogger.