Header Ads



நீதிமன்றத்தில் நேற்று ஞானசாரர் ஆடிய ஆட்டம், நீதிபதி இன்று என்ன செய்யப்போகிறார்..?


பொது பல சேனா செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு ஹோமாகம நீதவான் ரங்க அபேசிங்க திசாநாயக்க 25-01-2015 பொலிஸாருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு மேற்கொண்டமை அரச தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் எக்ெனலிகொடவின் மனைவி ஆகியோரை அச்சுறுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலே ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் பணித்தது.

ஊடகவியலாளர் பிரதீப் எக்னளிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று ஹோமாகம நீதிமன்றத்தில் நடைபெற்றது.மேற்படி வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற நடவடிக்ைககளுக்கு இடையூறு செய்தமை நீதிமன்றத்திற்கு முன்பாக தரக்குறைவாக நடந்து கொண்டமை அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணிகளை அச்சுறுத்தியமை என்பன தொடர்பில் இவருக்கு எதிராக குற்றஞ் சுமத்தப்பட்டது.

சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் மேற்படி பிடியாணை உத்தரவை வெளியிட்டார் . ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகொடவின் வழக்கு விசாரணையின் போது ஞானசார தேரர் அடங்களான சுமார் 20 பிக்குமார் நீதிமன்றத்திற்கு வருகை தந்தினருந்தனர்.

வழக்கு விசாரணையின் போது நீதவானை பார்த்து உரையாற்றிய ஞானசார தேரர், படைவீரர்களை புகழும் தற்போதைய அரசாங்கம் அரசாங்க அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக குறிப்பிட்டார். இதன்போது ஞானசார தேரரை பார்த்து கருத்துத் தெரிவித்த நீதவான், நீதிமன்ற நடவடிக்ைககளுக்கு இடையூறு செயற்படும் நீதிமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வேறு சாதாரண பொதுமகனுக்கு எதிராக நீதிமன்றம் எத்தகைய நடவடிக்ைக எடுக்கும் என நினைத்துப் பார்க்குமாறு கூறினார்.

நீதிமன்ற நடவடிக்ைககளுக்கு இடையூறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு ஞானசார தேரர் நீதிமன்றத்தை கோரினார்.

மீண்டும் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஞானசார தேரர், பாராளுமனத்தில் நாம் பார்த்துக் கொள்வோம் என்று கூறிய அவர், அரசாங்கம நாட்டை புலிகளுக்கு கையளிக்கிறது. படைவீரர்களை தூக்கில் இடுகிறது. வௌ்ளைக்காரனின் சட்டத்தை வைத்துக் கொண்டு நாட்டை ஆடுகிறார்கள் என்றார்.

இதன் போது அரசாங்க சிரேஷ்ட சட்டத்தரணி திலீப் பீரிஸ்.உபுல் குமாரப்பெரும ஆகியோர் கருத்து வௌியிட்டனர். நீதிமன்றத்தை விட்டு வௌியேறிய ஞானசார தேரர், உன்னுடைய புருஷன் ஒரு புலி. பிச்சையெடு என எக்னளிகொடவின் மனைவியைப் பார்த்து குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி உபாலி சேனாரத்ன நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.அந்த சமயம் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் இருந்து வௌியேறியிருந்தார். எக்னளிகொட சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் ஞானசார தேரரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும்.

நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பில் இதற்கு முன்னரும் ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. நிபொன் ஹோட்டலில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பியது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி லஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். புனித குர்ஆனை அவமதித்தது தொடர்பில் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு இவருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது தெரிந்ததே.

3 comments:

  1. பணிவது நாட்டின் சட்டமா அல்லது 'அஞ்'ஞானரா என்று பார்த்துவிடலாம். ஞானரால் அதிகாரமிழந்து வீட்டு ஜன்னல்களில் தொங்கியவர்கள் மீண்டும் அரச கட்டிலேர ஞானரைப் பயன் படுத்துகிறார்களோ?

    ReplyDelete
  2. ஒருவன் பகிரங்கமாகவே ஒரு குற்றவாளியாக இருந்தும் மதவெறியனாக இருக்கும் பட்சத்தில் நீதியில் இருந்து தான் தப்பி விடலாம் என்று நினைக்குமளவுக்கு இந்த சமூகத்தில் மதவெறியும் மதத்தின் பெயரால் நிகழும் மூடத்தனமும் இருப்பதை என்வென்று சொல்வது..?

    ReplyDelete
  3. Muslimgal muslimage irundhal yaralum nammai asaikka mudiyadhu....

    ReplyDelete

Powered by Blogger.