Header Ads



"இஸ்லாமும் நற்குணமும்"

-அபூ உமர் அன்வாரி மதனி-

 இஸ்லாத்தில் நற்குணம் பாரிய பங்கு வகிக்கிறது.இதை பெரிதும் இஸ்லாம் விரும்புகின்றது.எவரிடத்தில் இது  காணப்படுகின்றதோ அவர் உயரந்தவர், கண்ணியமானவர். இஸ்லாம் அனைத்து நற்குணங்களையும் பரிபூரணப் படுத்தியுள்ளது.அதற்கான வழிகாட்டல்களையும் காட்டியுள்ளது. நபிகளாரைப்பற்றி அல்லாஹ் கூறும் போது  “நிச்சயமாக  நபியே நீர் மிகவும் உயர்ந்த  பண்புகளை கொண்டவராக  இருக்கின்றீர்” என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இன்னும் நபிகளார் குறிப்பிடும் போது “உங்களில் மிகச்சிறந்தவர் நற்குணத்தில் சிறந்தவர் என கூறினார்கள். அபூ ஹுரைரா (ரலி) வர்கள் அறிவிக்கின்றார்கள்.ரஸூல் (ஸல்) அவர்களிடம் சுவனத்தில் அதிகம் நுழையச்செய்யும் செயல் எது என கேட்க நபிகளார் “அல்லாஹ்பற்றிய அச்சமும்,நல்லொழுக்கமும்” என பதிலளித்தார்கள். அதிகம் நரகம் இட்டுச்செல்லக்கூடியது எது என  கேட்ட போது “வாயும், மர்மஸ்தானமும்” என பதிலளித்தார்கள்.(நூற்கள் திரமித் 2004,அஹ்மத் 2/442/9694,இப்னு ஹிப்பான் 2/224)

  அல்லாஹ்விடத்தில் மிகவும் விருப்பத்துறகுரிய அடியானாக  மாறுவதற்கு நற்குணம் வழிவகுக்கின்றது.இதைப்பற்றி நபிகளார் கூறும் போது.”அல்லாஹவிடத்தில் மிரகவும் நேசத்திறிகுரிய  அடியான் அழகிய நற்குணம் கொண்டவர்” என கூறினார்கள். (நூற்கள் அல்ஹாகிம் 4/442,அத்தபரானி).நபிகளாரை நேசம் கொள்ளாத  உள்ளம் கிடையாது இந்த  நற்குணம் நபிகளார் நேசம் கொள்வதற்கும் மறுமையில் அவர்களுக்கு நெறுக்கமாக  இருக்கவும் உதவியாய் அமையும்.இதை நபிகளார் குறிப்பிடும் போது.”நிச்சயமாக உங்களில் மிகவும் எனக்கு விருப்பமானவரும், மறுமையில் எனக்கு அறுகாமையிலும் இருப்பவரும் நற்குணத்தால் சிறந்தவர்” என  நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல், திரமிதி,2018).

மறுமையில் நன்மைத்தட்டில் அதிக  எடை கொண்டதாக  இந்த  நற்குணம் அமையும் என்பதையும் நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.அதில் “நற்குணத்தைவிட  நன்மை தட்டில் கடினமானது வேறு ஒன்றுமில்லை” என குறிப்பிட்டார்கள் (நூல், திரமிதி 2002, இப்னு ஹிப்பான் 12/506).அளப்பிரிய  நன்மைகளை அள்ளி வழங்கின்றது.அதில் இரவில் நின்றுவணங்குபவரின் கூலியும்.பகலில் நோன்பு வைப்பவரின் கூலியும் நற்குண முடையவருக்கு கிடைக்கின்றது. இது பற்றிய  அறவிப்பு அபூதாவுத்,அஹ்மத் ஆகிய  நூற்களில் காணலாம்.இன்னும் விசுவாசத்தில் மிகச்சிறந்த செயல் நற்குணம் என  இஸ்லாம் கூறுகின்றது.நற்குணம் பல வகைப்படும் அனைத்திலும் உயர்ந்த  அல்லாஹ்வுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளல்,அவனது படைப்பாகிய மனிதர்களுக்கிடையில் நல்ல  முறையில் நடத்தல்.அவனது ஏனைய  அனைத்து படைப்பினத்துடனும் நல்ல முறையில் நடத்தல்.என மூன்று வகையாக  பிரித்து நோக்கலாம்.

முதல் பகுதியில் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரிய  விடயங்களை அவனுக்கு மாத்திரம் வழங்கல்.அவனுக்கு பூரணமாக  கட்டுப்படல், வழிப்படல் அவனுக்கு செய்பவைகளை திறன்பட  நிறைவேற்றல்,அதில் எவ்வித குறைவும் செய்யாது இருத்தல் போன்ற பல  அம்சங்களை குறிப்பிடலாம்.அவ்வாறு அவனது உரிமைகளையும் கடமைகளையும் அடியான் நிறைவேற்றும் போது அவனின் அன்பும் அளப்பரிய  அன்பளிப்பும் அடியானுக்கு கிடைக்கின்றது அது விலை மதிக்க முடியாத ஒன்று.

இரண்டாம் பகுதியான அடியார்களுக்கு மத்தியிலான நற்குணம் அவர்களுக்கு மத்தியில் அன்பையும்,இணைப்பையும் வலுப்படுத்துகின்றது. இணைவுகள் பலமாகின்றன. சிறப்புக்களும் கண்ணியமும் அதிகரிக்கின்றன.உதவி ஒத்தாசை புரிதல்,உண்மை,நேர்மை.வாய்மை,நீதி போன்றனவும் மன்னிப்பு, இரக்கம், விட்டுக்கொடுப்பு,பொறுமை போன்றன இந்த  சில  நற்குணங்களின் அடையாளம். நபிகளார் நற்குணத்தின் முன்மாதிரியாக  இருந்தார்கள் உலகம் போற்றுகின்றது. இதுவே நற்குணத்தின் பிரதிபலன். 

மனிதன் தவிரந்த ஏனைய  படைப்புகளுடனும் நற்பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.அறுக்கப்படும் பிராணியாக  இருப்பினும் அதனுடன் நற்பண்புடன் நடக்க வேண்டும்.தொல்லை கொடுக்கும் அற்ப  பூச்சாக  இருப்பினும் அதை சித்தரவதை செய்யாதும் நெறுப்பை கொண்டு எரிக்காதும் இருக்க வேண்டும்.நல்லமுறையில் அதை கொள்ள வேண்டும்.மரஞ்செடி கொடிகளை வீணாக வெட்டுவது அதை நாசப்படுத்துவது போன்றவற்றை இஸ்லாம் தடுத்துள்ளது. மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் பயிரிடுமாறு பணிக்கின்றது. அதை மிகப்பெரிய  நன்மை கொண்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றது.நற்குணங்கள் நல் மனிதனின் அடையாளச்சின்னம் அதை ஒவ்வொரு அடியானும் அடையாளப்படுத்தும் போது உலகம் ஒரு அழகிய  பூங்கா நனமாக  பூத்துக்குலுங்கும் என்பது திண்ணம்.

No comments

Powered by Blogger.