Header Ads



பொலநறுவையிலிருந்து ஒரு முஸ்லிம், சகோதரரின் ஆதங்கம்..!

என்னுடன் இருப்பது மஹேஸ், மதத்தால் பௌத்தன், என்வீட்டிலிருந்து கூப்பிடு தொலைவிலேதான் வாழ்கிறான்.மஹேஸ் பொ/தி/மண்ணம்பிடிய சிங்கள கல்லூரியில் ஆண்டு 11 ல் கற்கிறான். இவன் மீது நான் பேரன்பு வைத்திருக்கிறேன் அவனும் அப்படித்தான்.

நான் என்றால் அவனுக்கு அளவு கடந்த மரியாதை. இவனின் தாத்தா(சீயா) புதியன்சே பண்டார காலமாகி 20 வருடங்கள் ஆகின்றது.80 களில் இவர் தனக்கு சொந்தமான காணித்துண்டுகள் மூன்றை இருக்க இடமின்றி நிற்கதியான நிலையில் இருந்த மூன்று முஸ்லிம் குடும்பங்களுக்கு இனாமாக பகிர்ந்து வழங்கினார் என்றால் பாருங்களேன்.

மஹேசின் இளையமாமா பொடி நிலமே என் சினேகிதன் 1996 ல் இராணுவத்தில் (கஜபா படையணி)இணைந்து கொண்டான்.1998/07/18 அன்று மட்டகளப்பு புலிபாஞ்சான் எனும் இடத்தில் ரோந்து சென்ற போது விடுதலை புலிகளின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையானான்.அன்று அவனின் அடக்கநாளில் இராணுவம் வானை நோக்கி மரியாதை வேட்டுக்களை திற்தபோது எங்கள் முஸ்லிம் கொலனி கிராமமே அழுதது(இப்பந்தியை எழுதுகிற போது நான் கண் கலங்கிப்போகிறேன்)

நான் வேலை பார்கும் கடைக்கு சாமான் வாங்க வரும் வாடிக்கையாளர்களில் அதிகமானவர்கள் சிங்களவர்கள் அவர்களிடம் நாங்கள் நட்புணர்வோடு நடந்து கொள்கிறோம் அவர்ளும் அப்படித்தான்.வாழையடி வாழையாக பொலன்னறுவை முஸ்லிம்களான நாங்கள் சிங்களவர்களை எங்கள் கூட பிறந்த சகோதரர்களாகே பார்கிறோம்.இப்படி இருக்கையில் எங்கிருந்து வந்தது இந்த பொது -பலே/சிங்ஹ-லே

இவர்களின் இதயங்களுக்குள் விசச்செடிகளை விதைத்தது யார்?இவர்களின் கைகளாலேயே இவர்களின் கண்களை குத்தி காயப்படுத்திக்கொள்ளவா பார்கிறார்கள்.

ஆரிப் S நளீம்

1 comment:

  1. Pazha varkkangalai eppadi kilovaaga maatri vitkak katruk
    kondaargalo appadiththaan ina veriyayum katrukkondaargal.Ellaa
    naadugalilum migavum laapakaramana businessaaga izuzaan ippo
    nadakkuzu.

    ReplyDelete

Powered by Blogger.