மஹிந்தவின் சீடர்களுக்கு, பிடிக்காத விடயம் - சஜித் பிரேமதாச
கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களுக்காக புதிய சலூன் கதவு திறந்துள்ளது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் சீடர்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படுவது பிடிக்கவில்லை.
தம்மைப் போன்ற வலுவான கொள்கைப் பிடிப்புடையவர்கள் நாட்டிலும் நாடாளுமன்றிலும் இல்லை என வெளிக்காட்டிக் கொள்ள மஹிந்த தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
பாரியளவில் பிரச்சினை போட நினைக்கின்றார்கள், போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கின்றார்கள்.
எனினும் உண்மை என்னவென்றால், மஹிந்த தரப்பைச் சேர்ந்த சிலர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறான சிலர் விரைவில் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார்கள்.
கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் மட்டும் பிரவேசிக்கக் கூடிய வகையிலான சலூன் கதவு திறந்துள்ளது, அவர்கள் எம்முடன் இணைந்து கொள்வதில் தவறில்லை என சஜித் பிரேமதாச சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
Thats right
ReplyDelete