தவ்ர் குகையின், அற்புத நிகழ்ச்சி..! சுட்டிக்காட்டுவது என்ன..?
-நாகூர் ரூமி-
தவ்ர் குகையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒளிந்து கொண்டிருந்தபோது மூன்று அற்புதங்கள் நிகழ்ந்தன.
- எதிரிகள் அங்கும் தேடி வரத்தான் செய்தனர். ஆனால் குகை வாசலில் ஒரு சிலந்தி வலை பின்னியிருந்தது.
- இரண்டு புறாக்கள் கூடு கட்டியிருந்தன.
- ஒரு மரத்தின் கிளைகள் வளர்ந்து குகை வாசலை மறைத்துக் கொண்டிருந்தன.
உள்ளே யாரும் நுழைந்திருந்தால் அது கலைக்கப்பட்டிருக்கும், எனவே உள்ளே யாரும் இருக்க சாத்தியமில்லை என்று எண்ணி எதிரிகள் திரும்பிச் சென்றனர்.
"தவ்ர்" விடுக்கும் செய்தி :
இஸ்லாம் பரவிய வரலாற்றில் தவ்ர் குகை நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான செய்தி உள்ளது. அதுதான் அசைக்க முடியாத இறைநம்பிக்கையாகும்.
"இறைவன் நம்மோடு எப்போதும் இருக்கிறான்; அவன் நம்மை எப்போதும் காப்பாற்றுவான்" என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஒருவருக்கு இருந்தால் எந்த சூழ்நிலையிலும் அவர் இஸ்லாத்தை விட்டு விலக மாட்டார்.
தவ்ர் குகையில் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஏற்பட்ட அச்சம் அறிவார்ந்தது, தர்க்க ரீதியானது. குகை வாசலுக்கு வெளியே கொலைகாரர்கள். உள்ளே வந்தால் உயிர் போய்விடும். எப்படித் தப்பிக்க முடியும் என்பதுதான் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நியாயமான அச்சம். ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது உற்ற தோழரிடம் சொன்ன வார்த்தைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "பொன்னெழுத்துக்களால்" பொறிக்க வேண்டியவை.
لَا تَحْزَنْ إِنَّ اللَّـهَ مَعَنَا
"லா தஹ்ஸன், இன்னல்லாஹ ம'அனா" (அல்குர்ஆன் 9:40)
என்று சொன்னதாக அல்குர்ஆன் கூறுகிறது.
"அஞ்ச வேண்டாம், கவலை வேண்டாம், நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்" என்பதுதான் அந்த செய்தி.
இஸ்லாத்தில் இணைந்த ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும் அந்த செய்தி விதைக்கப்பட்டது.
இன்றைய முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்
ஒரு சரியான முஸ்லிமுக்கு இம்மையைவிட மறுமையே முக்கியம். உயிரைவிட இறைவனின் விருப்பமும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முக்கியம்.
இந்த அடிப்படை உறுதியின் காரணமாகவே எல்லாக் காலக்கட்டத்திலும் இஸ்லாம் என்ற கோட்டையை யாராலும் அசைக்கக்கூட முடியவில்லை. கோட்டையின் வலிமையும் பெறுகிக்கொண்டே போகிறது. இதை இன்றைய முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
"நிச்சயமாக இறைவன் நம்மோடு இருக்கிறான்" என்ற உணர்வு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்பட்டுவிட்டால், எல்லா பாதகமான சூழ்நிலையையும் நமக்குச் சாதகமாக் மாற்றும் அற்புதத்தை அது செய்ய வல்லது என்பதை "தவ்ர் குகை" அற்புத நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
அபூபக்கர் ரலி அவர்களின் பயமும் அது சம்பந்தமான விசயமும் குர்ஆனில் ஹதீஸில் உள்ளது .அனால் முதலில் கூறப்பட்ட சிலந்தி , புறவும் முட்டையும் , மரமும் கிளையும் இது சமந்தமாக ஆதாரமான அறிவிப்புகளை தரவும் ..இது நமது புழக்கத்தில் உள்ள ஏராளமான கட்டு கதைகளில் ஒன்றாக நம்புகிற தருணத்தில் கட்டுரை ஆசிரியர் இது சம்பந்தமாக தெளிவான ஆதாரம் முன்வைக்கணும் ..அல்லது பொய் கதை புனைந்த குற்றத்தில் இருந்து விடுபட என்ன செய்யணுமோ அதனை நாகரிகமாக செய்யவும்
ReplyDeleteWell said we need reference from Quran and Hadeeth to accept this spider web , tree, and peigon etc...
DeletePlease provide reference from Quraan and Hadeeth.
ReplyDelete