Header Ads



தௌபீக் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறித்து சர்ச்சை - BBC செய்தி

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ. ஆர். ஏ ஹபீஸ் தனது பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு, முன்னாள் துணை அமைச்சர் எம். எஸ். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையிலான தேர்தல் கூட்டு உடன்படிக்கையின்படி ஐ. தே. கட்சியினால் இரு தேசிய பட்டியல் பாராளுமன்ற இடங்கள் ஶ்ரீ ல. மு. காங்கிரஸுக்கு வழங்கப்பட்டிருந்தன. 

இந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் அப்போது கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் நிலவின. 

கட்சியின் பொதுச்செயலாளரான ஹசன் அலி மற்றும் முன்னாள் அமைச்சரான சேகு பசீர் தாவூத் ஆகியோருக்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் தீவிரமாக காணப்பட்டது. 

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவுப் ஹக்கீம் கட்சி தலைவர் என்ற ரீதியில் தனக்குரிய அதிகாரத்தின் பேரில் இறுதி நேரத்தில் அவரது சகோதரரான ஏ. ஆர். ஏ ஹபீஸ் மற்றும் சட்டத்தரணி எம். எச். எம். சல்மான் ஆகியோரை அப்போது பரிந்துரை செய்திருந்தார். 

தற்காலிக நடவடிக்கையாக தனது அதிகாரத்தின் கீழ் எந்த நேரத்திலும் பதவி விலகக் கூடியவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற அடிப்படையிலும்தான் இருவரையும் அவர் நியமித்திருந்தாக அவ்வேளை கூறப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள எம். எஸ். தௌபீக் எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றம் கூடும் போது பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதற்கிடையே இந்தப் பதவி இப்போது தௌபீக்கு கொடுக்கப்பட்டமை குறித்தும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு நிலவுவதாக லட்சி வட்டாரங்கள் கூறுகின்றன என, பிபிசி செய்தி வௌியிட்டுள்ளது. 

5 comments:

  1. சமூகம் எத்தனையோ பிரச்சினைகள் தள்ளாடி கொண்டு இருக்கும் இந்த கேவலம் கேட்ட சுய நலவாத அரசியல் வாதிகள் ஆசனத்திற்கு சண்டை போடு கின்றார்கள் இவர்கள் அங்கு சென்று என்னத்தை கிழிக்க போஹிரர்கள் இருப்பவர்கள் என்னத்த கிழித்தார்கள்

    இவர்களை சொல்லி குத்தம் இல்லை இந்த மானம் கேட்ட சுய யோசனை அற்ta மக்கள் இவர்களை தெரிவு செஇஹிரார்கல் அவர்களை சொல்லணும்

    ReplyDelete
  2. சர்ச்சை இன்றி தேசிய பட்டிலைத்தான் கொடுத்துவிட முடியுமா...? முகாவுக்கே 225 ஆசனங்களும் கிடைத்தாலும் இந்த சர்ச்சை தொடரத்தான் செய்யும், இப்போது ஊருக்கு ஒன்று கேட்பவர்கள், சந்துக்கு ஒன்று பொந்துக்கு ஒன்று என்று கேட்பார்கள் :)

    ReplyDelete
  3. மிகச்சரியாய் கூறியிருக்கின்றீர்கள், சர்தார்!

    மு.கா. எப்போதுமே குழப்பங்களின் கூடாரமாகவே இருந்து வந்திருக்கின்றது.

    ReplyDelete
  4. போனஸ் எம்பி பங்கீடு முடிந்துவிட்டது அதை நியாயப்படுத்த பல மாதங்கள் போய்விடும் அப்போ எப்போது இவார்கள் புதிய யாப்பு பற்றிப்பேசுவது பெரும்பான்மைக்கச்சியாகுள் மும்முரமாக இருக்கும்போது சிறுபான்மையான நாம் இவ்வளவு போடிபோக்காக இருக்க காரணம் என்ன?இவ்வாறு இருந்தால் அவர்கள் புதிய யாப்பை நிறைவேற்றி அதன் பிரதி போடோ கொப்பியை கொடுப்பார்கள் பார்த்துக்கொள்ள சொல்லி.இப்படியொரு மடத்தனமான சமுதாயம் உலகில் எங்கும் இல்லை.ஒரு நாட்டின் அரசியல் யாப்பு திருத்தம் நடக்கபோகிறது எந்த உணர்வும் இல்லாமல் இருக்கும் கச்சிகளின் நடவடிக்கைகள் புரியாத புதிராக இருக்கிறது.

    ReplyDelete
  5. அடுத்தகட்டத்திற்கு கட்சியையும் முஸ்லீம் சமூகத்தையும் நகர்த்துவதில் இன்றைய தேசியத்தலைவர் சகோதரர் ஹக்கீம் தோல்விமேல் தோல்வியை பதிவுசெய்துவருகிறார்.தேர்தகளை சமாளிப்பதே இவரின் தேவை.

    சமூகம் எப்படி சீரழிந்தாலும் அதிலும் தனது சாணக்கியமாகவே பார்க்கிறார் போலும்.

    ReplyDelete

Powered by Blogger.