Arabic Talent show நிகழ்ச்சியில், 9 வயது சிறுமியினால் கண்ணீர் சிந்திய அரங்கம் (வீடியோ)
Arabic Talent show நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடிய சிறுமி, தனது தாய்நாடான சிரியாவிற்கு அமைதி வேண்டும் என்று கண்ணீர் சிந்தி பாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் நிலவி வரும் உள்நாட்டுப்போர் காரணமாக அப்பாவி மக்கள் உடமைகளை இழந்து உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அண்டை நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர்.
மேலும், போரின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரா பிரச்சனை, அமைதியின்மை போன்ற காரணங்களால் மக்கள் நிம்மதியின்றி தவித்த வருகின்றனர்.
இந்நிலையில், பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் (Arabic Talent show) கலந்து கொண்ட Ghina Bou Hemdan's (9) என்ற சிறுமி, எங்கள் தாய்நாடான சிரியாவிற்கு அமைதி வேண்டும், எங்களின் குழந்தை பருவத்தை நாங்கள் பெற வேண்டும் என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை பாடிக்கொண்டிருந்தபோது, அச்சிறுமி தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார், அழுகையை கட்டுப்படுத்த முடியாமலும், மேற்கொண்டு பாடலை பாட முடியாமலும் திணறிய அச்சிறுமியை பார்த்த நடுவரான லெபனான் பாடகி Nancy Ajram, உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து சென்று அச்சிறுமியை கட்டியணைத்து பாடலை பாட தொடர்ந்து உற்சாகப்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் மேற்கொண்டு சிறுமியுடன் சேர்ந்து அப்பாடலை பாடியுள்ளார்.
மற்ற இரு நடுவர்களும் சிவப்பு பொத்தானை அழுத்தி அச்சிறுமியை அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்தனர், மேலும் இவரின் பாடலால் அரங்கம் மட்டுமல்லாமல் இச்சிறுமியின் உறவினர்களும் உணர்ச்சிபூர்வமாக கண்ணீர் சிந்தி, அச்சிறுமியை உற்சாகப்படுத்தினர்.
லெபனான் பாடகியான Nancy Ajram, அச்சிறுமியை, தனது குழுவில் பாடுவதற்கு தெரிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை பார்க்க முடியவில்லை. பின்வரும் குறிப்பு இடப்பட்டுள்ளது. "This video contains content from MBC Group, who has blocked it in you country on copyright grounds. Sorry about that."
ReplyDeleteWhat to do? This child is suffering in her childhood. it can not be fun among its war trauma
ReplyDelete