A/L பரீட்சையில் சித்தியடைந்தவர்களே...! நன்றிக்கடன் மறக்காதீர்கள்...!!
-குவைத்திலிருந்து - ரியாஸ் மொஹமட்-
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களை புகழவதும் அவர் சார்ந்த பாடசாலை அத்துடன் சமூகம் பெருமை பட்டுக்கொளவதையும் நாம் கடந்த சில நாட்களாக காண முடிந்தது.
இவ்வாறான மகிழ்ச்சியின் பிண்ணனியில் குடும்பமும் சமூகமும் பல எதிர்பாரபுக்களை கொண்டுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
கற்றவர்கள் சமூகத்துக்கு எந்த அளவு பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை ஆளமாக ஆராய வேண்டியுள்ளது . எமது சமூகம் கற்ற சமூகமாக இருக்க வேண்டும் என்ற எமது எதிர் பார்ப்பு உண்மையில் சமூக பிரச்சனைகளில் பங்கெடுத்து தான் சார்ந்த துரையினூடாக அல்லது தனது அனுபவத்தினூடாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதே.
பட்டங்கள் பெற்று ஊரைவிட்டு போகும் ஒரு சாரார், நாட்டை விட்டு போகும் ஒரு சாரார் , அத்துடன் தான் உண்டு தன் வேலை குடும்பம் உண்டு என்ற ஒரு சாரார் அதுபோக ஒரு குறிப்பிட்ட சிலரே சமூக நலன்களில் பங்களிப்பதை நாம் நோக்கலாம்.
கற்று தேரந்தவரகளின் பட்டியலொன்றை நாம் போட்டால் வியப்படையக்கூடியளவு அதிகமான தொகையை காணலாம் .
எனவே சமூக சிந்தனை ஆளமாக எமது மாணவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும். குறிப்பாக இவ்வாறு உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தன்னை வளர்த்த சமூகத்துக்கும் பாடசாலைக்கும் பயன் பெற வேண்டும்.
எனவே சமூகம் மற்றும் பாடசாலை அடையும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் அர்த்தம் புரிந்து செயல்திறன் உள்ள சமூக உருப்பிணர்களாக வாழ இம்மாணவர்களை வாழ்த்துகிறேன்.
Post a Comment