Header Ads



A/l பரீட்சை முடிவுகள் குறித்து ஞானசாரா

இம்முறை வெளிவந்துள்ள கல்வி பொதுதராதர பரீட்சையின் பெறுபேறுகளைப் பார்த்தால் எதிர்காலத்தில் இலங்கையின் கல்வியின் நிலமையானது ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தர பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களை வாழ்த்துவதோடு அவர்களுக்கு எனது ஆசிகளையும் வழங்குகிறேன். அதேபோல் வெற்றியீட்டிய மாணவர்களை ஊடக நிறுவனங்களுக்கு அழைத்து அவர்களை பெறுமைப்படுத்துவதையும் வரவேற்கிறேன்.

இருந்த,போதிலும் எமது இலங்கையின் எதிர்கால கல்வியானது கேள்விக்குறியாக மாறியுள்ளதை அனைவரும் அவதானிக்க தவறிவிட்டனர். குறிப்பாக ஆடசியாளர்களே இந்த நிலமைக்கு காரணம் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வி என்பது ஒரு நாட்டின் மதிப்பை வெளிபடுத்தக்கூடியது. அதேபோல், கலாச்சாரம் தேசிய மரபுரிமைகள் ஆகும். ஆனால், தற்போதைய கலாச்சாரம் வழி தவறிய ஒன்றாகி விட்டது. அத்துடன் 2013ஆம் ஆண்டு கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் சித்தியடைந்தவர்களில் 34 வீதமானவர்கள் ஏனைய 66 வீதமானோர் கலை மற்றும் வர்த்தகப்பிரிவுகளில் சித்தியடைந்துள்ளார்கள். எனவே, இந்த முடிவுகளானது நாட்டின் கல்வியை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

ஏனெனில் ஒரு நாட்டின் அபிவிருத்தி அல்லது வளர்ச்சியின் மூலக்கூறு விஞ்ஞானம் மற்றும் கணித துறைகளின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளதாகவும் வெளிவந்துள்ள பெறுபேறுகள் கல்வியின் நெருக்கடி நிலைமையை வெளிக்காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. இந்தவிடயமும் ஏதோ ஒன்ரை சாடிமரைமுகமாக பேசியதுபோல்தான் உள்ளது

    ReplyDelete
  2. இதன் மீதி பின்னர் வரும் காட்டுமிராண்டி தவேசத்துடன்

    ReplyDelete
  3. What is the qualification this fellow has to talk about Education?

    ReplyDelete
  4. துவேசி நாய்.... சிறுபான்மை மாணவர்கள் சகல துறைகளிலும் முதலிடம் வந்ததை மறைமு
    கமாக தூற்றுகிறான்......

    ReplyDelete
  5. துவேசி நாய்.... சிறுபான்மை மாணவர்கள் சகல துறைகளிலும் முதலிடம் வந்ததை மறைமு
    கமாக தூற்றுகிறான்......

    ReplyDelete
  6. நீ நாட்டின் தலை இடி இந்த நாட்டுக்கு no feuture மஞ்சல் உடை உல்ல வரை

    ReplyDelete

Powered by Blogger.