A/L பரீட்சையில் 6547 பரீட்சாத்திகளுக்கு 3 A - பல்கலைக்கழகம் பிரவேசிக்க 131,137 பேர் தகுதி
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 6547 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மூன்று ஏ சித்திகளைப் பெற்றுக்கொண்ட பரீட்சார்த்திகளில் 5960 பேர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்தரப் பரீட்சையில் 255,191 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இதில் 131,137 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்க குறைந்த பட்ச தகுதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
2014ம் ஆண்டில் மொத்த பரீட்சார்த்திகளில் 60.43 வீதமான பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகம் செல்ல குறைந்த பட்ச தகுதியை பூர்த்தி செய்திருந்ததுடன், 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60.91 வீதமாக காணப்படுகின்றது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

What for university? No need waste the time there. That is useless. Because, there is no any priority for internal graduates in the job market.
ReplyDeleteuniversity is like a teaching colleague for most of the Muslims, to get a teaching job
ReplyDelete