பெற்றோல் 90 ரூபா, டீசல் 70 ரூபாவினாலும் விலை குறைக்குமாறு கோரிக்கை
பெற்றோல் லீற்றரின் விலையை 90 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாகவும் குறைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
உலக சந்தையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மசகெண்ணெய்க்கான விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதன் நன்மை பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
எனவே குறித்த விலைக்குறைப்பை மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில், கடந்த 11 வருடங்களில் பெற்றோலுக்கான அதி குறைந்த விலைப்பெறுமதி கடந்த வாரம் பதிவாகி இருந்தது.
இதன்படி மசகெண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 30 டொலர்களாக நிலவியது.
இதன் முழுமையான நன்மை பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது.
There is no difference between this Ranil's government and previous Mahinda's regime in terms of suppressing the public financially. The government fleece the ordinary people as much as they can.
ReplyDelete