Header Ads



பெப்ரவரி 9 ஆம் திகதி வரை, ஞானசாரருக்கு விளக்கமறியல்

பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது.

இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நேற்று நீதவானால் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், ஹோமாகம பொலிஸில் இன்று தேரர் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

7 comments:

  1. மாமியார் வீடு மகா சவுக்கியமாக இருக்கும் இவனுக்கு அங்கு என்ன சலுகை கொடுத்தாலும் கம்பி கூண்டில் போட்டாச்சு. மதிப்புக்குரிய நீதிபதிக்கு நன்றி

    ReplyDelete
  2. u r in the hell now at least 1-day......Thank God....and salute for the Judge...& referred lowers...

    ReplyDelete
  3. பயங்கரவாதி ஞானவை செங்கம்பளம் விருத்து 21பீரங்கி மரியாதை வேட்டு தகர்த்து தேசிய கீதம் பாடி இராணுவ அணிவகுப்போடு ஜெய்லுக்கு அழைத்துச் செல்லுங்கள்

    ReplyDelete
  4. ஜெயிலுக்குள் சிறந்த பௌத்தன் இல்லையா?

    ReplyDelete
  5. இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தலையிடாமல் இருப்பது நல்லம்.

    ReplyDelete

Powered by Blogger.