உலக நாடுகளில் ஊழல் - இலங்கை 83 ஆவது இடம்
2015 ஆம் ஆண்டிற்கான உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில் இலங்கை 83 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.சீனா, கொலம்பியா, பெனின், லைபீரியா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இலங்கைக்கு இணையான இடத்தைப் பிடித்துள்ளன.
2014 ஆம் ஆண்டைப்போலவே 2015 ஆம் ஆண்டிலும் டென்மார்க், ஊழலற்ற நாடாக முதலிடத்தில் உள்ளது.
சோமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்து காணப்படும் நாடுகளாக கடைசி இடமான 167 ஆவது இடத்தில் உள்ளன.
இந்தியா இந்தப் பட்டியலில் 76 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 9 இடங்கள் ஏற்றங்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2015 ஆண்டின் உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு வெளியிட்டுள்ளது.
மொத்தம் 168 நாடுகள் கொண்ட இந்தத் தரநிலைப் பட்டியலில் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
உலக வங்கி, சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்கள் இணைந்து, உலக நாடுகளில் நடைபெறும் பொதுத்துறை ஊழல்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த ஊழல் பார்வை குறியீடு உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டைப் பொருத்தவரை உலகளவில் ஊழலை எதிர்த்து மக்களின் குரல் ஓங்கி ஒலித்த மற்றொரு ஆண்டு என்றே சொல்ல வேண்டும். மக்களின் எதிர்ப்புக் குரல் ஆட்சியாளர்களுக்கு வலுவான செய்தியை தாங்கிச் சென்றுள்ளது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் பாய வேண்டிய தருணம் வந்துவிட்டது, என டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் ஜோஸ் உகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment