ஒரேநாளில் 80 பேரை சுட்டுக்கொன்று, மரண தண்டனை நிறைவேற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள்
வட ஈராக்கின் நிவ்னே மாகாணத்திலுள்ள மொசூல் நகரில் நேற்று ஒரேநாளில் 80 பேரை சுட்டுக்கொன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கஸ்லானி ராணுவ முகாம் அருகே நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் 80 பேரையும் வரிசையாக முழங்காலிட்டு அமரவைத்து, பின்பக்கம் துப்பாக்கிகளுடன் நின்றிருந்த தீவிரவாதிகள் அவர்களின் தலையில் சுட்டுக்கொன்றதாக உள்ளூர் ஊடகமான சுமைரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அரசு மற்றும் ராணுவத்தின் ரகசிய உளவாளிகளாக செயல்பட்டதாக சந்தேகித்து, சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்டவர்கள் என்றும் அந்த செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment