டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாய் மரணம்
-எம்.இஸட்.ஷாஜஹான்-
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஏழு மாத கர்ப்பிணித் தாய் மரணம்
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஏழு மாத கர்ப்பிணித் தாய் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (15) அதிகாலை மரணமாகியுள்ளார்.
வதகொவ்வ, மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த நாலவத்த அபயசிங்க அப்புஹாமிலாகே தொன் துலானி உதாரி அபேசிங்க (29 வயது) என்று ஏழு மாத கர்ப்பிணித்தாயே டெங்கு காய்ச்சலினால் பலியானவராவார்.
மரணமடைந்த பெண்ணின் தந்தையான ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் ல{லானந்த கபில சிறிமகன மரண விசாரணையின் போது சாட்சியமளிக்ககையில் கூறியதாவது,
எனது மகள் கடுமையாக சுகயீனமுற்றிருந்தார். அவர் தனது முதலாவது குழந்தையை பிரசவிக்கவிருந்தார். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் மூன்;றாம் இலக்க வார்டில் நான்கு தினங்களாக சிகிச்சைப் பெற்றும் பயனளிக்கவி;ல்லை. மூன்;றாம் இலக்க வார்டில் இருந்த வைத்தியர் உட்பட உத்தியோகத்தர்கள் எனது மகள் தொடர்பாக இதைவிட அக்கறை செலுத்தி வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு வார்டில் எனது மகளை அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி கே.எல்.எம்.ஏ. பெரேரா பிரேத பரிசோதனை செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடுமையான டெங்கு காய்ச்சலினால் ஏற்பட்ட பாதிப்பால் உடலில் உள்ளுறுப்புக்கள் செயலிலந்தமையினால் ஏற்பட்ட மரணம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment