Header Ads



ஊடகவியலாளர் லசந்தவின் கொலை - இன்றுடன் 7 வருடங்கள் கடந்தது

சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் 7 வருடங்கள் கடந்துள்ளது.

7 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கொலையுடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்பட வில்லை.

லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி காலை 10.15 அளவில் அத்திட்டிய பேக்கரி சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாம இரண்டு துப்பாக்கிதாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார்

தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இல்ககான விக்ரமதுங்க, படுகாயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அன்றைய தினம் மதியம் 2.15 மணியளவில் மரணமடைந்தார்.

No comments

Powered by Blogger.