Header Ads



61 வீத­மான யுவ­திகள், திரு­ம­ண­மான ஆண்­களை மணக்க விரும்­பு­கின்­றனர் - கருத்­துக்­க­ணிப்பு முடி­வுகள்

(விடிவெள்ளி + எம்.ஐ.அப்துல் நஸார்

டுவிட்டர் சமூ­க­வ­லைத்­தள பயன்­பாட்­டா­ளர்கள் மத்­தியில் நடத்­தப்­பட்ட ஒரு  கருத்­துக்­க­ணிப்பில் ஒன்­றுக்கு மேற்­பட்ட பெண்­களை திரு­மணம் செய்­வ­தற்­கான ஆண்­களின் உரி­மை­யினை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக தமது ஆத­ர­வினை வழங்­கு­வ­தாக 61 வீத­மான சவூதி அரே­பி­யாவின் ரியாத் நகரில் அமைந்­துள்ள இள­வ­ரசர் நோரா பல்­க­லைக்­க­ழக மாண­விகள் தெரி­வித்­துள்­ளனர்.

'திரு­ம­ண­மான ஒரு ஆணை நீங்கள் திரு­மணம் செய்ய விரும்­பு­கி­றீர்­களா?' என்ற கேள்­விக்கு 61 சத­வீ­த­மான மாண­விகள் 'ஆம்' என்றும், 30 சத­வீ­த­மான மாண­விகள் 'இல்லை' என்றும், 9 சத­வீ­த­மான மாண­விகள் 'கருத்துத் தெரி­விக்க விரும்­ப­வில்லை' என்றும் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த விடயம் டுவிட்டர் சமூ­க­வலைத் தளத்தில் கல்­வி­யி­ய­லா­ளர்கள், எழுத்­தா­ளர்கள், சட்­ட­வல்­லு­நர்கள் மற்றும் ஏனையோர் மத்­தியில் ஆத­ர­வா­கவும், எதி­ரா­கவும் பரந்­து­பட்­ட­தொரு விவா­தத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பல­தா­ர­மணம் என்­பது 'ஆண்­களின் பிரத்­தி­யேக உரி­மை­யாகும்' எனவும் சில சந்­தர்ப்­பங்­களில் கட்­டாய கட­மை­யாகும் எனவும் இமாம் மொஹமட் பின் சௌத் இஸ்­லா­மியப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் இலக்­கிய விமர்­சனப் பேராசி­ரி­ய­ரொ­ருவர் தெரி­வித்தார்.

பொது­வாக சமுதா­யத்­தி­ன­ருக்கு வழி­காட்­ட­லுக்­காக வழங்­கப்­பட்ட குர்­ஆ­னிய வச­னங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பன்­மைத்­துவம் சட்­ட­பூர்­வ­மா­ன­தென்­ப­தோடு ஆண்­க­ளுக்கும் பெண்­க­ளுக்கும் பல்­வேறு வழி­க­ளிலும் அது நன்­மை­ய­ளிக்கக் கூடி­ய­தா­கவும் இருப்­ப­தாக அவர் குறிப்­பி­டு­கின்றார்.

'இந்த விட­யத்தில் பயனைப் பெறு­பவர் பெண்­ணே­யன்றி, ஆணல்ல' என அப் பேரா­சி­ரியார் சுட்­டிக்­காட்­டு­கின்றார்.

 'அனைத்து ஆண் கல்­வி­யி­ய­லா­ளர்­களும், நீதி­ப­தி­களும், விஞ்­ஞான மாண­வர்­களும் மற்றும் சட்­டத்­த­ர­ணி­களும் ஒரு மனை­வி­யுடன் தம்மை வரை­ய­றுத்­துக்­கொண்­டார்­க­ளானால், சமூகம் பல்­வேறு நன்­மை­க­ளையும், பண்­பு­க­ளையும் இழந்­து­விடும், விசே­ட­மாக பெண்கள் இழந்து விடு­வார்கள்' எனவும் அவர் தெரி­விக்­கிறார்.

பல­தா­ர­மணம் என்­பது ஐந்து இஸ்­லா­மிய நீதி­முறை கொள்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. முதலில் எது அனு­ம­திக்­கப்­பட்­டது என்­பது, இதுவே அடிப்­ப­டை­யான விடயம், அடுத்­தது ஒரு ஆணின் சூழ்­நி­லை­யினைப் பொறுத்­த­வ­ரையில் எது ஹலா­லா­னது என்­பது.

மூன்­றா­வது, கட்­டாயக் கடமை - 'பொரு­ளா­தார வளம் கொண்­ட­வ­ரா­கவும் நீதி­யா­கவும் சம­ம­மா­கவும் நடத்­தக்­கூ­டிய  தன்­மை­யு­டை­ய­வ­ரா­கவும் இருக்கும் ஒருவர் ஒன்­றுக்கு மேற்­பட்ட திரு­ம­ணங்­களைச் செய்­ய­வில்­லை­யாயின் அவர் தனது மார்க்கக் கட­மை­யினை சரி­யாக நிறை­வேற்­றா­த­வ­ராவார்' என அவர் குறிப்­பி­டு­கின்றார்.

நான்­கா­வது கொள்கை ஒரு மனிதன் தனது இரண்­டா­வது மனை­வி­யுடன் மிகுந்த சிர­மத்­துடன் வாழ­வேண்­டிய நிலையும், அதிக தவ­று­களை செய்யக் கூடிய சந்­தர்ப்­பங்­களும் இருக்­கு­மாயின், அந்த மனிதன் பல­தா­ர­மணம் புரி­வ­தனை மார்க்கம் அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

இறு­தி­யாக, ஐந்­தா­வது கொள்கை 'தடுக்­கப்­பட்­டது' என்­ப­தாகும். அதா­வது ஒரு மனிதன் தனது முத­லா­வது மனை­வி­யுடன் கடு­மை­யாக நடந்துகொள்பவனாகவும், அவளுக்கு பணம் வழங்காமலும் இருப்பானாக இருந்தால், அவன் தனது இரண்டாவது மனைவியுடனும் அவ்வாறே நடந்கோள்ளக் கூடும். ஆகவே அந்த மனிதனின் விடயத்தில் பலதாரமணம் என்பது தடுக்கப்பட்டதாகும்.

இந்த ஐந்து கொள்கைகளும் தராதரம் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலை என்பனவற்றின் அடிப்படையில் அனைத்து ஆண்களுக்கும் ஏற்புடையதாகும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

No comments

Powered by Blogger.