தலிபான்களின் பிடியில் 5 ஆண்டுகளாக இருந்த கனேடியர் - மீட்பதற்கு உதவிய கத்தாருக்கு நன்றி
ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா வந்த கனடிய இளைஞரை பிணையக்கைதியாக பிடித்து வைத்திருந்த தலிபான் தீவிரவாதிகள் 5 ஆண்டுகளுக்கு பின் அவரை விடுதலை செய்துள்ளனர்.
கனடாவின் ரொறன்ரோ பகுதியை சேர்ந்தவர் கொலின் ரூதர்போர்ட்.
வரலாறு மற்றும் கட்டடகலையில் ஆர்வமிக்க ரூதர்போர்ட் கடந்த 2011ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தனை சுற்றி பார்க்க சென்றுள்ளார்.
அவரை உளவாளி என்று நினைத்த தலிபான் தீவிரவாதிகள் பிணையக்கைதியாக சிறைபிடித்தனர்.
அவரை மீட்பதற்காக அவரது குடும்பத்தினர் கனடிய அரசாங்கத்துக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ரூதர்போர்டை மீட்க உதவி செய்யுமாறு கனடிய அரசாங்கம் கத்தார் நாட்டுக்கு வேண்டுகொள் வைத்தது.
இதையடுத்து கத்தார் அரசாங்கமும் ரூதர்போர்டின் விடுதலைக்காக தீவிர முயற்சி மேற்கொண்டது.
இதன் காரணமாக 5 ஆண்டுகளுக்கு பிறகு ரூதர்போர்ட் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரூதர்போர்ட்டின் விடுதலைக்கு பின் பலரது உழைப்புகள் அடங்கியுள்ளன என்று ஒட்டாவாவில் உள்ள கத்தாருக்கான தூதர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரூதர்போர்டை மீட்கும் நடவடிக்கையில் தலிபான்களுக்கு எந்த பணமும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரூதர்போர்ட்டை மீட்பதற்கு உதவி செய்த கத்தார் நாட்டுக்கு தங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் டியொன் கூறியுள்ளார்.
Post a Comment