கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன்களின், அளவு 5.7% இனால் அதிகரிப்பு
2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015ம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்கலன் செயற்பாடுகள் 5.7% வளர்ச்சியடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கொல்களன்கள் செயற்பாடுகள் பிரதானமாக இரண்டு துறைகளின் கீழ் செயற்படுகின்றது. அவை ஏற்றுமதி - இறக்குமதி கொள்கலன்கள் மற்றும் மீள் ஏற்றுமதி கொள்கலன்கள் செயற்பாடுகளாகும். 2014ம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தில் நடைப்பெற்ற ஏற்றுமதி - இறக்குமதி கொள்கலன்களின் அளவு 1,126,985 ஆகும். ஆனால் 2015ம் ஆண்டு இந்நடவடிக்கை 1,217,971 வரையில் அதிகரித்துள்ளதுடன் இது 8.1 %வளர்ச்சியாகும். 2014ம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தில் நடைப்பெற்ற மீள் ஏற்றுமதியன் அளவு 3,780,930 ஆகும். 2015ம் ஆண்டில் இந்நடவடிக்கை 3,967,496 வரையில் அதிகரித்துள்ளது. அது 4.9% வளர்ச்சியாக பதியப்பட்டுள்ளது. எனவே 2014ம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தில் நடைப்பெற்ற மொத்த கொள்கலன்கள் ஏற்றுமதி - இறக்குமதி நடவடிக்கைகள் 4,907,915 ஆகும். இம்மொத்த ஏற்றுமதி - இறக்குமதி நடவடிக்கைகள் 2015ம் ஆண்டில் 5,185,467 வரையில் அதாவது 5.7% வளர்ச்சியினை எட்டியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தற்பொழுது காணப்படுகின்ற சிறந்த முகாமைத்துவம், ஊழியர்களின் அர்பணிப்பான செயற்பாடுகள் காரணமாகவே இவ்வளர்ச்சியினை எட்டக்கூடியதாக இருந்தாக துறைமுகங்கள் அதிகாரச் சபை குறிப்பிட்டது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்களின் வழிக்காட்டல்களின் கீழ் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் பலாபலன்களையும் மற்றும் செயற்பாட்டு திறனையும் அதிகரிப்பதற்காக அர்பணிப்புடன் செயற்படுகின்ற ஊழியர்களை பாரட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் ஊழியர்களிற்கான பதவி உயர்வுகளை வழங்குவதற்கு தேவையான செயற்திட்டத்தை இலங்கை துறைமுக அதிகாரச் சபையிற்கு அறிமுகப்படுத்துவதாக ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றுகையில் அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் அறிவித்தார். மனித வளங்கள் திட்டத்தினை மீள்பரிசீலனைச் செய்து உழியர்கள் நன்மையடையும் வகையிலான எதிர்கால திட்டத்தினை அறிமுகப்படுத்துவதாக அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment