Header Ads



இலங்கையில் இன்றுமுதல், நடைமுறைக்கு வரும் 5 முக்கிய விடயங்கள்..!

1

12 இலக்கங்களை கொண்ட பிளாஸ்டிக் புதிய தேசிய அடையாள பிளாஸ்டிக் அட்டைகள், இன்று முதல் அச்சிடப்படவுள்ளது. இதனை  ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

2

பயணச்சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணம் செய்தால், இன்று முதல் பயணச்சீட்டின் பெறுமதியில் இருமடங்குடன் ரூபாய் 5000மும் தண்டப்பணமாக விதிக்கப்படும் என, போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனுடன் எதிர் வரும் நாட்களில் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்தது.

3

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினால் முன்வைக்கப்பட்ட வரி திருத்தங்கள் இன்று (1) முதல் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி பெறுமதிசேர் வரி (VAT), என்.பீ.ரி (NBT) மற்றும் காணிகளுக்கான வரித் திருத்தங்களே இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

4

மைக்ரோன் 20 இற்கு குறைவான தடிமன் கொண்ட பொலித்தின்இ இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மைக்ரோன் 20 இற்கு குறைவான தடிமன் கொண்ட பொலித்தின் உற்பத்தி செய்வதுஇ விற்பனை செய்வது மற்றும் கையுடமையாக வைத்திருப்பது சட்டவிரோதம் எனஇ மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்தார்.

5

ஒரேநாளில் பெற்றுக்கொளள்ப்படும் கடவுச்சீட்டுக் கட்டணம் அதிகரிக்கபட்டுள்ளது

4 comments:

  1. மைக்ரோன் 20 இற்குக் குறைவான பொலித்தீனை கையுடமையாக வைத்திருப்பதை சட்டவிரோதமாக்கியது ஆரோக்கியமானதல்ல.

    பழைய பார்சல் ஒன்றை சுற்றி வைத்திருந்தால், அதுவும் தவறா?

    ReplyDelete
  2. கையுடைமை என்பதன் அர்த்தம் புரிந்தால் இச் சந்தேகம் வந்திறாது

    ReplyDelete
  3. நல்லது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ho much for one day service for passport specific country(middle east)

    ReplyDelete

Powered by Blogger.