4 ஆம் திகதி வரை, ஜனாதிபதி மைத்திரிக்கு காலக்கெடு..!
-தமிழில் GTN-
தேர்தல் பிரச்சார காலப்பகுதியில்வழங்கப்பட்ட சீர்திருத்த வாக்குறுதிகளை பெப்ரவரி நான்காம் திகதிக்குள் நிறைவேற்றாவிட்டால் கடும் அரசியல் விளைவுகளை ஜனாதிபதி சிறிசேன அரசாங்கம் சந்திக்கநேரிடும் என அரசாங்கத்திற்குள் காணப்படும் செல்வாக்கு மிக்க பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் ராஜிதசேனரத்தின சில நாட்களிற்கு முன்னர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
40 சிவில் சமூக அமைப்புகள் இது தொடர்பில் கடும் அழுத்தங்களை விடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்ட 40 சிவில் சமூக அமைப்புகள் அமைச்சர் ராஜிதவிடம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், தாங்கள் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிகொள்ள நேரிடும், எனவும் மேலும் தாங்கள் அரசாங்கத்தை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டிவரலாம் எனவும் எச்சரித்துள்ளன.
எங்களிற்கு வாக்களித்தவர்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகின்றது,என தனது ஆதரவாளர்களிற்கு தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் சிவில்சமூக அமைப்புகள் ஆதரவை விலக்கிக்கொண்டால் எனக்கும் வேறு வழியில்லை நானும் கடுமையான அரசியல் முடிவுகளை எடுக்கநேரலாம் என குறிப்பிட்டுள்ளார்.சுகாதார அமைச்சரும் அவரது அமைச்சரவை சகாக்களான சம்பிக்க ரணவக்க அர்ஜூனரணதுங்க ஆகியோரும் சுதந்திரதினத்திற்கு முன்னர் அரசாங்கம் தெளிவான தந்திரோபாயமொன்றை முன்வைக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
சிறிசேனவிடம் தனது சீற்றத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியாத அமைச்சர் ராஜித சேனரத்தின கடந்த வாரம் ஜனாதிபதியின் செயலாளர் பிபிஅபயகோனை கடுமையாக சாடியிருந்தார்.பிபி அபயகோன் மீது முன்யை ஆட்சிக்காலத்தில் சில ஊழல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறிசேன அரசாங்கம் முன்னயை அரசாங்கத்தில் ஊழல்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் எவருக்கு எதிராகவும் தீர்க்ககரமான சட்ட நடவடிக்கையை எடுக்க தவறியுள்ளது.பசில் தொடர்பான வழக்குகள் தவிர ஏனையவை அனைத்தும முடங்கியுள்ளன.லசந்த தாஜூடீன் மற்றும் பிரகீத் தொடர்பான விசாரணைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை,சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத நிலையே காணப்படுகின்றது.ஜனாதிபதி சிறிசேன தான் விசாரணைகளை தடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.எனினும் அரசாங்கத்திற்குள்ளிருந்து வெளிவரும் குழப்பமான சமிக்ஞைகளே இதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெப்ரவரி நான்காம் திகதிக்கு பின்னர் இதன் காரணமாக அமைச்சர்கள் பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் இல்லாதபோதிலும் ஆளும் கூட்டணிக்குள் அதிருப்தி அதிகரிக்கும் ஆபத்துள்ளது.
Post a Comment