Header Ads



47 பேரின் மரண தண்டனைக்கு அமெரிக்கா கண்டனம், ஈரானில் சவுதி அரேபிய தூதரகம் எரியூட்டப்பட்டது -


சவுதி அரேபியாவினால் ஷியா பிரிவின் பிரமுகர் நிம்ர் அல் நிம்ர் இற்கு  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கடும் அதிர்ப்தியை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளபடும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இவர் பின்னணியில் செயல்பட்டதாக தெரிவித்தே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவருடன் மேலும் 46 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை கண்டிக்கத்தக்கது என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய அரசாங்கம் மனித உரிமைகளை மதிப்பதுடன் அதனை பாதுகாப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் வெளிப்பாட்டுத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.

நேற்று நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளுக்கு எதிராக சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தவிர, ஈரானிய தலைநகர் டெஹரானில் உள்ள சவுதி அரேபிய தூதுவராலயம் எரியூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2

சவுதி அரேபியாவில் முக்கிய ஷியா தலைவர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை, அங்கு அசாதாரண நிலையை தோற்றுவித்துள்ளது.


அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்து, ஷேக் நிம்ர் அல் நிம்ர் என்ற ஷியா மதத்தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதனை அடுத்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



அங்குள்ள ஷியா சமுகத்தவர்களாலும், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இதேவேளை, சவுதி அரேபியாவின் இந்த செயற்பாட்டுக்கு, தக்க பதிலை பெற வேண்டிய நிலை ஏற்படும் என்று, ஈரான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


6 comments:

  1. "சவுதி அரேபிய அரசாங்கம் மனித உரிமைகளை மதிப்பதுடன் அதனை பாதுகாப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்."

    என்ன ஒரு joke! யார் இதை சொல்கிறார்கள் அமெரிக்கா! சதாம் ஹுசைன், கடாபி , போன்றவர்களை கொல்லும் போது இராக்கிய அந்த சட்டத்துக்கு மதிப்பலித்த அமெரிக்கா இப்ப ஊழை இடுகிறது ! அது மட்டுமல்லாமல் எகிப்தில் பொது மக்களால் ( ஆதாவது அவர்கள் கூறும் சனநாயக முறையால்) தேர்தெடுக்கப்பட்ட முர்சின் அரசாங்கத்தை army coup இன் மூலம் கைப்பற்ற உதவியர்கள் மனித உரிமைகள் பற்றி பேசுகிறார்கள்.

    ReplyDelete
  2. "சவுதி அரேபிய அரசாங்கம் மனித உரிமைகளை மதிப்பதுடன் அதனை பாதுகாப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்."

    என்ன ஒரு joke! யார் இதை சொல்கிறார்கள் அமெரிக்கா! சதாம் ஹுசைன், கடாபி , போன்றவர்களை கொல்லும் போது இராக்கிய அந்த சட்டத்துக்கு மதிப்பலித்த அமெரிக்கா இப்ப ஊழை இடுகிறது ! அது மட்டுமல்லாமல் எகிப்தில் பொது மக்களால் ( ஆதாவது அவர்கள் கூறும் சனநாயக முறையால்) தேர்தெடுக்கப்பட்ட முர்சின் அரசாங்கத்தை army coup இன் மூலம் கைப்பற்ற உதவியர்கள் மனித உரிமைகள் பற்றி பேசுகிறார்கள்.

    ReplyDelete
  3. Iran mulu muslimgalukm periya idanjal

    ReplyDelete
  4. Mr. voice
    when the democratically elected Mohamed Mursi was toppled by Abdul fatah Al sisi, America stopped their aid program to Egypt. So then saudi foreign Minister Crown prince Faizal angrily said "We will give money to Egypt to run the Government". Saudi arabia and UAE are backing Sisi. His kangaroo court gave 500 muslim brotherhood movement members death sentence in a one jugement.It is the World record. Also killed more than 250 peaceful demonstrators who supported the mohamed Mursi. Recently he requested Israel not to allow Turkey's aid to Gaza strip also blocked all the rout from Egypt to Gaza. UAE is going to erect tallest tower in Egypt. So this murderer was well supported by Gulf countries not America.

    ReplyDelete
  5. In gulf countries Qatar following deference policy. Qatar and Turkey supporting Mohamed Mursi and also Hamas and Gaza people.Qatar is good example that it following middle path and involved in so many peace talks resolving so many middle east depute.Regarding this Sheikh Hamad Khalifa al Thani did great job.

    ReplyDelete
  6. Imthiyas I am aware of it. I am not here to White Paint Saudi, I am here to say the common enemy is talking about '' Freedom of Speech and Democracy''

    ReplyDelete

Powered by Blogger.