ஈரானுக்கு 400 விமானங்கள் தேவையாம்..!
இரான் 114 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் ஒன்றில் இந்த வாரம் கையெழுத்திடவுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி உற்பத்தி தொடர்பில், இரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடை நீக்கப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரானிய அதிபர் ஹசன் ரௌஹானி பிரான்ஸுக்கு புதன்கிழமை மேற்கொள்ளவுள்ள பயணத்தின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என போக்குவரத்து அமைச்சர் அப்பாஸ் அக்குந்தியை மேற்கோள்காட்டி இரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அணுசக்தி உற்பத்தி தொடர்பில், இரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேசத் தடை நீக்கப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரானில் பழைமையாகியுள்ள விமானங்களை மாற்றி, அடுத்து வரும் தசாப்தங்களுக்கு ஏற்ற வகையில் சேவைகளை மேம்படுத்தி மாற்றி அமைக்க குறைந்தது நானூறு விமானங்கள் தேவைப்படுவதாக மேற்கத்திய மற்றும் இரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment