Header Ads



சவூதி அரேபிய தூதரகத்தை, தீயீட்ட 40 பேர் கைது


ஈரான் நாட்டில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து 40 பேரை கைது செய்துள்ளோம் என ஈரான் நாட்டு அதிகாரி இன்று (03) கூறியுள்ளார்.

சவூதி அரேபிய அரசு, தீவிரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஷியா பிரிவை சேர்ந்த மத தலைவர் ஒருவர் உட்பட 47 பேருக்கு நேற்று ஒரே நாளில் மரண தண்டனையை நிறைவேற்றியது.  இந்நிலையில், ஷியா பிரிவின் மத தலைவரான ஷேக் நிமர் அல் நிமர் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு சவூதி அரேபிய தூதரை அழைத்து ஈரான் அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது.

இதனிடையே, நிமருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள சவூதி அரேபிய தூதரகம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர்.  இந்த சம்பவத்தை அடுத்து சந்தேகத்திற்குரியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த நடவடிக்கைகள் தொடரும் என தெஹ்ரான் நகர வழக்கறிஞர் அப்பாஸ் ஜாப்ரி தோலத்தபடி கூறியுள்ளார் என ஐ.எஸ்.என்.ஏ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.