முக்கிய 4 பிரமுகர்கள் 42,650 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர் - சதுர
மஹிந்த குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை சுருட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதுர சேனாரத்ன, இன்று (11) காலி பலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள் நான்கு பேர் இணைந்து 42,650 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் காரணமாக மேலதிக விபரங்களை வெளியிட முடியாதுள்ளது.
எனினும் கடந்த ஆட்சியின் குறித்த முக்கிய பிரமுகர்கள் நான்கு பேரும் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
புளிச்சி போச்டா உங்கள் இந்த நாடகம் எவனுக்கும் தைரியம் இல்ல
ReplyDeleteஎத்தனை காலந்தான் ஏமாற்றுவீர்
ReplyDeleteஇந்த நாட்டிலே?
எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் என்பதை விட எத்தனை காலம் நாம் ஏமாந்து கொண்டிருக்குறோம் என்று பார்த்தால் சரி.
ReplyDelete