ஈரானுடன் உறவு இல்லை - மேலும் 3 முஸ்லிம் நாடுகள் தீர்மானம்
ஈரானுடனான உறவுகளை முடிவிற்குக கொண்டுவருவதற்கு சவூதியின் பங்காளி நாடுகளான பஹ்ரேன், சூடான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன தீர்மானித்துள்ளன.
சவூதி அரேபியாவில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 47 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்களால் ஈரானிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டது.
அதை தொடர்ந்து ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்திருந்தது.
அத்துடன், சவூதி அரேபியாவிலுள்ள ஈரானிய இராஜதந்திரிகளை 48 மணித்தியாலங்களில் வெளியேறுமாறும் சவூதி அரேபியா எச்சரித்தது.
அத்துடன், ஆயுத கடத்தலின் ஊடாக அல் – கைதா இயக்கத்தை ஈரான் பாதுகாப்பதாகவும் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக சவூதியின் பங்காளி நாடுகளான சூடான் மற்றும் அரபு இராச்சியம் தெரிவித்திருந்தன.
நேற்றைய தினம் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக பஹ்ரேனும் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய தினம் கூடிய பஹ்ரேன் அமைச்சரவை இந்த முடிவை எட்டியுள்ளதுடன் தெஹ்ரானில் அமையப் பெற்றுள்ள சவூதி தூதரகம் மீது 2 பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையில் எதிர்ப்பும் வெளியிடப்பட்டது.
Well done. Don't want siya. Be pure muslim
ReplyDeleteஉலக அளவில் ஷீயா,சுன்னி பிரச்சனைகளை படிப்படியாக ஏற்படுத்தி வந்த இஸ்ரேலும் அமெரிக்காவும் தற்போது ஈரானை தனிமைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது .எனவே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க இஸ்ரேல் திட்டமானது மிக அண்மையில் எதிர்பார்க்கலாம்
ReplyDeleteஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போன்ற மூன்று நாடுகளும் இன்றைய உலகை ஒழுங்குபடுத்துகின்றன.மிக மிக ஆபத்தான நாடுகள்.
Deleteஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போன்ற மூன்று நாடுகளும் இன்றைய உலகை ஒழுங்குபடுத்துகின்றன.மிக மிக ஆபத்தான நாடுகள்.
ReplyDeleteசவுதி மாபெரும் வரலாற்றுத் தவறை செய்திருக்கிறது. மன்னராட்சியின் அழிவின் ஆரம்பம்
ReplyDeleteஒரே நோக்கத்தை கொண்ட இரு வெவ்வேறு அணிகள் (அமெரிக்க-இஸ்ரேல், ரஷ்ய-ஈரான்) முஸ்லிம் உலகை ஆதிக்கம் செலுத்துவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அரபு நாடுகள் உணர்ந்துகொள்வதை இது காட்டுகிறது!
ReplyDeleteமுதலில் வரலாற்ரை சரியாக படித்திருந்தால் தவருகலும் அதற்கான தன்டனைகலும் எதுவென்ரு முகம்மட்டிற்கு விழங்கியிருக்கும் அதுமட்டுமல்ல ஈரான் எத்தனை உயிர்கலை கொன்ரு வரலாற்ருதவரினை செய்துல்லது எனும் உன்மையும் தெரியவில்லை என்ரு நினைக்கின்ரேன்.......எனவே இப்போவும் முயட்சிசெய்தால் வரலாருகலை படிக்கமுடியும் பக்குவமாக கருத்துகள் எழுதமுடியும்......
ReplyDelete