Header Ads



3 பிரிவுகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று, கல்முனை ஸாஹிறா சாதனை

வெளியாகிய 2015ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி கல்முனை ஸாஹிறா கல்லூரியின் மூன்று மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். பௌதீக விஞ்ஞானத்தில் முதலிடம் பெற்ற செல்வன் என்.எம.சாதிர் 3A சித்தியுடன் நாடளாவிய ரீதியில் 190 ம் இடத்தையும், இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் எஸ்.எச்.எம். சஜாத் A, 2B சித்தியுடன் நாடளாவிய ரீதியில் 28ம் இடத்தையும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் ஜே.டீ. ஹிக்மத் A,2B சித்தியுடன் நாடளாவிய ரீதியில் 22ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

அத்தோடு பௌதீக விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில், செல்வன் ஏ.ஆர். அச்பாக் அஹமட் மூன்றாம் இடத்தையும், செல்வன் எம்.என்.எம். நாழிர் நான்காம் இடத்தையும் செல்வன் எம்.ஐ.எம்.எம்.எச். அதீப் ஏழாம் இடத்தையும் செல்வன் ஏ.எம். அப்சல் இலாஹி பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் செல்வன் எம்.ஏ.ஜே.எம்.ஏ அப்னி ஐந்தாம் இடத்தையும், செல்வன் கே.எம்.எம். அஸாம் ஹூசைன் ஆறாம் இடத்தையும் செல்வன் ஏ.எம்.எம். முர்சித் ஏழாம் இடத்தையும் செல்வன் எம். அப்னான் ஒன்பதாம் இடத்தையும் செல்வன் ஏ.கே. றஸா முஹம்மட் பதினைந்தாம் இடத்தையும் செல்வன் ஏ.சீ.எம். டீன் முஹம்மட் பதினெட்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதேபோல் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் செல்வன் எப்.ஆர். ரிகாஸ் நான்காம் இடத்தையும் செல்வன் எம்.எப்.எம். இம்தாதுல் ஹக் ஏழாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் பல மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம், பழைய மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

2 comments:

Powered by Blogger.