Header Ads



39 வருட சேவையிலிருந்து, ஓய்வு பெறுகின்றார் அதிபர் எஸ். அகமது

(சுலைமான் றாபி)

நிந்தவூர் கமு/கமு/அல்- மதினா மகா வித்தியாலயத்தில் கடந்த 8 வருடங்களாக அதிபராக கடமையாற்றிய சிக்கந்தர் அகமது அதிபர் அவர்கள் 03.01.2016 சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
நிந்தவூரை பிறப்பிடமாக கொண்ட இவர் அகமது லெவ்வை சிக்கந்தர்,செயினவும்மாவின் புதல்வருமாவார் 1991ம் ஆண்டு மும்தாஜ் நிலாவைத் திருமணம் செய்து  கொண்ட இவருக்கு அகமது அப்றோஸ் என்ற மகளுன்டு. தனது ஆரம்ப கல்வியை நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை கல்முனை ஸாகிறா தேசிய பாடசாலையிலும் கற்றார்.

1977ல் விவசாய விஞ்ஞாண ஆசிரியர் நியமனத்தை பெற்று கொண்ட இவர் நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை, ஹட்டன் ஹைலன்ட் கல்லூரி, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயம் , அட்டளைச்சேனை தேசிய பாடசாலை ஆகியவற்றில் ஆசிரியராக கடமை புரிந்தார். இக்கால கட்டத்தில் இடைநிலை , உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.1982 பலாளி ஆசிரிய கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார்.

1988 ஆண்டு இலங்கை அதிபர் சேவைக்கு நடைபெற்ற போட்டிப் பரிட்சையில் முதற்தர சித்தி பெற்றுத் தெரிவானார்.இக்காலப் பகுதியில் சுமார் 39 வருடங்கள் சேவையில் 27 வருடங்கள் பாடசாலையின்  பொறுப்பதிபராக கமு/அக்/ஒலுவில் அல் அஸ்ஹர் வித்தியாலயம் , கமு/அஸ்ஸபா வித்தியாலயம் , நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயம் , கமு/அல்-மதினா  மகா வித்தியாலயம் என்பவற்றில் கடமையாற்றியுள்ளார். இக்காலப் பகுதியில்  கணிணி டிப்ளோமா, கல்வி முகாமைத்துவ டிப்ளோமா ,மனிதவள முகாமைத்துவ டிப்ளோமா, தொழில் வழிகாட்டல் டிப்ளோமா , கல்வி உளவியல் டிப்ளோமா கற்கை நெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

கமு/கமு/அல்-மதினா மகா வித்தியாலயத்தில் 8 வருடங்கள் பொறுப்பதிபராக கடமையாற்றிய  இவரது காலத்தில் அதிகமான மாணவர்கள் தரம் 5 புலமைபரிசில் பெற்று சித்தியெய்தியுள்ளனர் மேலும் க.பொ.த சாதாரன தரத்தில் 9யு சித்தி பெற்றும் க.பொ.த. உயர்தர பிரிவில் 3யு சித்தி பெற்றும்  மாவட்டத்தில் 1ம் இடத்தை பெற்றும் சாதனை படைத்தனர். இங்கு கற்ற மாணவர் பலர் பல்கழைக் கழகங்களுக்கு தெரிவானதுடன் கல்வியல் கல்லூரி, தொழிநுட்ப கல்லூரிகள்  மற்றும் ஏனய பல கற்கை நெறிகளுக்கும் தெரிவாகியுள்ளதுடன் பல்வேறு சமூக சேவைகளிலும்  ஈடுபட்டு வருகின்றனர்.

இவரது காலத்திலேயே  உயர்தர கலை ,வர்த்தக வகுப்புக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தரம் 5 புலமை பரிசில் ,க.பொ.த சாதாரன தரப்பரீட்சை நிலையங்களாகவும் பெற்றுக் கொடுத்தார். இவரது காலத்திலேதான் இப்பாடசாலை கல்விச் செயற்பாடுகளில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதை யாவருமறிவர். அத்தோடு இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டுப் போட்டி ஆங்கில தினம் மீலாத்தினப் போட்டிகள் சுற்றாடல் தினம் சிங்கள தினம்  போன்றவற்றில்  தேசிய மட்ட சாதனைகள் கிடைத்துள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்கள் இப்பாடசாலையிலேயே ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர்.

பௌதிக வள அபிவிருத்தி கூடுதலாக இவரது காலத்திலேயே நடைபெற்றுள்ளதுடன் 3 மாடிக்கட்டிடம் ,நிருவாக கட்டிடம், நூலக அமைப்பு, சுற்றுமதில், ஆசிரிய மாணவர் வாகனத் தரிப்பிடம், பாடசாலை சுற்றிவர மின்சார வசதிகள் , பாதையமைப்பு,தொழிநுட்ப ஆய்வுகூடம்,நவீன மலசல கூடம்,முன்வாயில் அமைப்பு போன்றவற்றை குறிப்பிடலாம் 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட இப்பாடசாலை பெரு வளர்ச்சி கண்டுவருகிறது.

இலங்கை 1ம் தர அதிபர் சேவையை சேர்ந்த இவர் சிறிது காலம் நிந்தவூர் கோட்டக்கல்வி பணிப்பாளராகவும்  கடமையாற்றினார். கல்முனை வலய ஆசிரிய சங்க செயலாளராகவும் இஸ்லாமிய ஆசிரிய சங்க இடமாற்றச்சபை  உறுப்பினராகவும்,புவுணு வளப்பயிற்றுனராகவும் 4 வருடங்கள் கடமையாற்றியுள்ளர்.

இஸ்ரேல் நாட்டுக்கு கல்விச் சுற்றுலாவை மேற்கொண்ட இவர் 2011ல் ஜனாதிபதியின் 'குரு பிரதிபாபிரபா' சிறப்பு விருதையும் 1991ல் வடகிழக்கு மாகாண கல்விச் செயலாளரின்  சிறந்த பாடசாலை அதிபருக்கான விருதையும் பெற்றவராவார். சர்வதேச ஆசிரியர் தின 2014ல் சிறந்த அதிபருக்கான  விருதையும் தேசிய ரீதியில் சாமசிறி தேசமான்ய ,தேசகீர்த்தி , வித்தியாரத்ன, ரத்னதீப போன்ற பட்டங்களையும் கவித்துவத்துக்காக 'கவியருவி' என்ற பட்டமும்  கிடைக்கப்பெற்றவராவார்.

இவர் பாடசாலையின் கவியரங்கு,பட்டிமன்றம், பாடல் இயற்றி இசையமைத்து பாடுவது போன்றவற்றைத் தலைமை தாங்கி நடத்துவதால் பாடசாலையின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் சிறப்பாக கலைகட்டுவதுன்டு. அத்துடன் பல்வேறு சமூக அமைப்புக்களில் தலைவராகவும்  செயலாளராகவும் ஆலோசகராகவும் அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் அமைப்பின் இணைப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார். இவரது அருஞ்சேவைகளை பாடசாலைச்சமூகம் நன்றியுடன் நினைவு கூறுகின்றது.

1 comment:

  1. I really appreciate! ஓய்வின் பின்னரும்
    உங்கள் சேவை தொடரட்டும்!

    ReplyDelete

Powered by Blogger.