ஐரோப்பாவுக்கு வந்தவர்களில் 3,770 பேரின், உயிரைக் குடித்த கடல்
ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி வரும் அகதிகளின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காமல் பிரித்தானிய பிரதமரான கமெரூன் வேடிக்கை பார்ப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்டி, சர்வதேச மீட்புக்குழு அமைப்பு உள்ளிட்ட 27 தொண்டு நிறுவனங்கள் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் பேசிய தொண்டு நிறுவன உயர் நிர்வாகிகள், ‘எதிர்வரும் 5 வருடங்களில் பிரித்தானிய நாட்டில் 20,000 சிரியா அகதிகளுக்கு புகலிடம் அளிப்போம் என பிரதமர் கமெரூன் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டது பாராட்டத்தக்கது.
ஆனால், ஐரோப்பிய நாடுகளில் பெருகி வரும் அகதிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இது மிக குறைந்த எண்ணிக்கை ஆகும். இந்த எண்ணிக்கையை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அதேபோல், ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் ஒட்டுமொத்த அகதிகளின் பிரச்சனையில் பிரதமர் கமெரூனின் செயல்பாடுகளில் திருப்திகரமாக இல்லை.
தற்போது உள்ள திட்ட நடவடிக்கைகளை விடுத்து புதிய கண்ணோட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பிரதமர் கமெரூன் செயல்பட வேண்டும்.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோர கடல் மார்க்கமாக வந்த சுமார் 3,770 புலம்பெயர்ந்தவர்கள் கடலில் மூழ்கி பலியாகினர்.
இந்த சோகமான நிலை இந்த ஆண்டிலும் தொடராத வண்ணம் பிரித்தானிய பிரதமர் ஐரோப்பிய நாடுகளுடன் இணக்கமாக ஈடுப்பட்டு விரைந்து செயல்பட வேண்டும் என அந்த தொண்டு நிறுவன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Post a Comment