"காலிமுகத் திடலில் நாளை, 368 மில்லியன் எரியூட்டப்படுகிறது"
சுங்கத் திணைக்களத்தின் மத்திய உளவுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைவாக கடந்த 2012ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட 368 மில்லியன் ரூபா பெறுமதியான ஆபிரிக்க யானைகளின் தந்தங்கள், நாளை அழிக்கப்படவுள்ளன. நாளைய தினம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
கொழும்பு – காலிமுகத் திடலில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது கைப்பற்றப்பட்ட 1528.9 கிலோ நிறையுடைய 359 யானைத் தந்த ங்கள் அழிக்கப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மார்க்கம் ஊடாக கடத்தப்பட்டுக் கொண்டிருந்த போது கப்பல் ஒன்றினை சோதனை செய்தபோதே அதில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து இந் யானைத் தந்தங்கள் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து இவை ஆபிரிக்காவில் இருந்து கடத்தப்பட்டவை என்பது உறுதியானது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்கள் இதுவரை பாதுகாக்கப் பட்ட நிலையில் நாளை காலை 10 மணிக்கு அழிக்கப்படவுள்ளன. சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இந்நடவடி க்கை இடம்பெறவுள்ளது. இதன்போது பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இந் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அழிவடையும் நிலையில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பான சயிட்டிஸின் பொதுச் செயலாளர் ஜோன் ஸ்கென்லன் நேற்று இலங்கையை வந்தடைந்தார். அவர் இலங் கையில் பல்வேறு தரப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
யானைத் தந்தங்களை ஏற்றுமதி செய்வதோ அல்லது இறக்குமதி செய்வதோ அல்லது மீள் ஏற்றுமதி செய்வதோ வர்த்தகம் செய்வதோ சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே சர்வதேச நியமங்களுக்கு அமைவாக கைப்பற்றப்பட்ட குறி த்த தந்தங்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்படவுள்ளன.
Post a Comment