Header Ads



இலங்கையரிடம் உள்ள நீலநிற மாணிக்ககல், திடீரென 300 மில்லியன் (4200 கோடி) டொலர்களாக உயர்ந்தது

100 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய சப்பையர் ரக மாணிக்ககல்லின் விலையை அதன் உரிமையாளர் தற்போது 300 மில்லியன் டொலர்கள் என்று அறிவித்துள்ளார்.

300 மில்லியன் டொலர்களுக்கு தம்மிடம் உள்ள மாணிக்ககல்லை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக ஏஎப்பி தெரிவித்துள்ளது.

முட்டை வடிவிலான இந்த மாணிக்ககல் 1404.49 கரட்டை கொண்டது.

இந்தநிலையில் ஏனைய மாணிக்ககற்களை காட்டிலும் இந்த மாணிக்ககல் வித்தியாசமானது என்று தெரிவித்துள்ள மாணிக்ககல் விற்பனையாளர், குறித்த மாணிக்ககல்லை யாரும் களவாடிவிடுவர் என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பரில் அகழப்பட்ட இந்த மாணிக்ககல்லை தாம் இரகசியமான இடத்தில் வைத்திருந்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.