Header Ads



டுபாயில் 3, 393 மில்லியன்களை வைப்புச் செய்துள்ள 3 இலங்கை பிரபலங்கள் - ராஜித பரபரப்புத் தகவல்

மத்திய கிழக்கு நாடான டுபாயில் உள்ள வங்கி ஒன்றில் 3 ஆயிரத்து 393 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்துளள இலங்கை சேர்ந்த மூன்று பேர் குறித்து அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

இவர்களில் ஒருவர் அரச குடும்பத்து உறுப்பினர் எனவும் அவரது வங்கிக் கணக்கில் ஆயிரத்து 89 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரச குடும்பத்துக்கு நெருக்கமான வர்த்தகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவரது வங்கிக் கணக்கில் 504 மில்லியன் அமெரிக்க வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த அரசாங்கத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் நிறுவனம் ஒன்றின் தலைவராக இருந்த ஒருவரும் இணைந்து வைத்துள்ள கூட்டு வங்கிக் கணக்கில் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்த நபர்களின் டுபாய் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சிங்கப்பூர் வங்கிக் கணக்குகள் சம்பந்தமாக தகவல் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. அனைத்து தகவல்களும் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. You are telling this story for more than one year. Yahapalanaya is inefficient to prove this.

    ReplyDelete
  2. இதனைக் கூறிவிட்டு வழமைபோல சும்மா
    இருந்திடுவீர்கள் அவ்வளவுதான்!

    ReplyDelete
  3. Haji pulla pencil kalvendi na endu adichi thiruthurathukku idu pre school illa

    Political problems and crimes it takes hell of alot of time

    Ongalaukku MR maadri aaal eenda ippa hira koodu poottu eeepaan but this is least 90% drmocracy on the work

    So its gonna take time fot arrest and development

    ReplyDelete

Powered by Blogger.