Header Ads



எரித்திரியா நாட்டு ஆண்கள் 2 காலியாணம் முடித்தலும், தமிழ் ஊடகங்களும்

-Tharmalingam Kalaiyarasan-

எரித்திரியா என்ற நாட்டில் என்ன நடக்கிறது என்பது தமிழர்கள் பலருக்குத் தெரியாது. அயல்நாடான எத்தியோப்பியாவுடனான எல்லைப் போரில், எந்தப் பயிரும் வளராத கட்டாந்தரைக்காக போரிட்டு மடிந்த இலட்சக்கணக்கான எரித்திரியர்கள் பற்றி என்ன தெரியும்?

எரித்திரியாவில் இருபதாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் கொடுங்கோல் சர்வாதிகாரியின் அட்டூழியங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? ஐரோப்பாவில் கூட அடக்குமுறைக் கரங்கள் பரவி இருக்கின்றன. அதனால், புலம்பெயர் நாடொன்றில் (நெதர்லாந்தில்) வாழும் பாதிக்கப்பட்ட எரித்திரியர்கள், தமது அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

அந்த நாட்டில், தினந்தோறும் நடக்கும் படுகொலைகள், சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் பற்றி தமிழர்களான நமக்கு எதுவும் தெரியாது. ஆனால், இவை எல்லாம் இன்றைக்கும் சர்வதேச ஊடகங்களில் அடிபடும் தகவல்கள் தான். (அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை என்பது உண்மை தான்.)

எரித்திரியாவில் நடக்கும் சிறைக் கொடுமைகள், அரச அடக்குமுறைகளுக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான அகதிகள் வெளியேறும் தகவலை யாரும் கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள். இன்றும் கூட, ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் மொத்த அகதிகளின் எண்ணிக்கையில், சிரியர்களுக்கு அடுத்ததாக எரித்திரியர்கள் தான் அதிகம்.

இவற்றைப் பற்றி எந்தவொரு தமிழ் ஊடகமும் உங்களுக்குத் தெரிவிப்பதில்லை. ஆனால், "எரித்திரியாவின் இரண்டு மனைவிகள் சட்டத்திற்கு" முக்கியத்துவம் கொடுத்து வெளியிடாத தமிழ் ஊடகங்கள் குறைவு. அவற்றை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு இன்புறாத "தமிழ் ஆர்வலர்கள்" குறைவு.

எரித்திரியாவில் நடந்த படுகொலைகள், சிறைக்கொடுமைகள், சித்திரவதைகள் பற்றி பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாது. ஆனால், "எரித்திரிய அரசு தனது ஆண் பிரஜைகள் கட்டாயம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் (?) என்று சட்டம் போட்ட தகவல்" மட்டும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.

சிலநேரம், அது எரித்திரிய அரசு அல்லது அதன் எதிரிகள் வேண்டுமென்றே பரப்பிய வதந்தியாக இருக்கலாம். அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? கிளுகிளுப்பான தகவல் என்றால், வதந்தியாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா?

இப்படித் தானே தமிழர்கள் மீதும் பிற நாட்டவர்கள் அக்கறை காட்டுவார்கள்? "ஈழத்தில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு உலகம் கண்டனம் தெரிவித்ததா?" என்று உலக நாட்டு மக்களிடம் "நீதி" கேட்கும் தமிழர்கள், நீதியாகத் தான் நடந்து கொள்கிறார்களா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்கள் கூட, எரித்திரிய மக்களின் துன்பங்களை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, இப்போது எரித்திரியாவின் இரண்டு மனைவிக் கதையை பகிர்ந்து கொண்டு திரிகிறார்கள். இவர்களை மாதிரித் தானே உலக மக்களும் நடந்து கொள்வார்கள்..?

3 comments:

  1. Eritrean Women are very kind hearted. Most of my Eritrean friends says that their wives will feed them, in case if the husband doesn't like it they will get very upset.
    Eritrean Ladies are way better when compared with other African women. Normally African women are too controlling specially Somali women.
    When the government giving the man everything and the women don't mind marrying them why would someone has to be against it ?
    In India the women are less than men because of female infanticide ( pen sisukkolai), Even though Indians (non Muslims) cannot marry two wives they have more Mistresses ( vappatikal) than others.

    ReplyDelete
  2. very good comment well said

    ReplyDelete
  3. Dear Badusha I Have two room mates Eritrean friends one of them christian and Muslim Both are saying they need democracy and Muslim are leading the majority 90% out of 100% but government is under Christianity leader and he is a very bad leader and behind of their government US and UNA are playing main role and same thing happens in Somalia also and you know there is gold silver petroleum many kind of rare elements. and government is doing black money business thats what their economy going down world media do not publish these kind of news and many of African country's ( wealthy elements and resource country and majority of Muslim country) are under the control of us and etc and Somalia one of the wealthy country they have uranium elements but you know whats is that happening there?

    ReplyDelete

Powered by Blogger.