ஈராக்கில் 2 பள்ளிவாசல்கள் குண்டுவைத்து தகர்ப்பு
சவூதி மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஈராக்கில் இரு சுன்னி பள்ளிவாசல்கள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டிருப்பதோடு மூவர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ உடையில் வந்தவர்கள் பள்ளிவாசலுக்கு குண்டு வைத்ததாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஈராக்கின் ஹில்லா பிராந்தியத்தில் இருந்த இரு பள்ளிவாசல்களே இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிறு நள்ளிரவுக்கு பின்னர் பர்காலி என்ற பகுதியில் அம்மார் பின் யாஸிர் என்ற பள்ளிவாசலே தாக்கப்பட்டுள்ளது. இலக்காகி இருக்கும் மற்றைய பள்ளிவாசல், ஹில்லா பிராந்தியத்திற்கு அருகில் கிராமம் ஒன்றில் இருக்கும் அல் பத்தாஹ் என்ற பள்ளிவாசலாகும்.
பாரிய சத்தம் ஒன்று கேட்டதும் நாம் அதனைத் தேடிச் சென்றபோதே பள்ளிவாசலுக்கு குண்டு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். “இராணுவ உடையில் வந்தவர்களே குண்டு வைத்ததாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டனர்” என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். இந்த குண்டு வெடிப்பால் அருகில் இருக்கும் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மற்றுமொரு வன்முறை சம்பவத்தில் பள்ளிவாசலின் முஅஸ்ஸின் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்கன்தரியாவில் இருக்கும் தனது விட்டுக்கு அருகிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஷீஆ சுன்னா மோதல்களை உருவாக்க பலத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. விழிக்குமா சமூகம்?
ReplyDeleteCoca cola வை புறக்கனிக்க முடியாத சமுதாயமாயிற்றே எப்படி விழிக்கும்
ReplyDelete