ஒரே தண்டவாளத்தில் வந்த 2 புகையிரதங்கள் - நேருக்கு நேர் மோதும் பாரிய விபத்து தடுக்கப்பட்டது
சற்று நேரத்திற்கு முன்னர் கிந்தோட்டையில் ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் பாரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி செல்லும் ரஜரட்ட ரெஜினே கடுகதி புகையிரதம் மற்றும் கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி செல்லும் கடுகதி புகையிரதம் ஆகிய இரண்டுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதும் விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
கிந்தோட்டை தர்மபால வித்தியாலத்திற்கு அருகில் உள்ள பாலம் இருக்கின்ற பகுதியில் இரண்டு புகையிரதங்களும் நேருக்கு நேர் வந்து நின்றுள்ளன.
ஒரே தண்டவாளத்தில் பயணித்த இந்த இரண்டு புகையிரதங்களும் வந்த வேகத்தில் சுமார் 10 அல்லது 15 அடி தூர இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இரண்டு புகையிரத சாரதிகளும் விரைவாக செயற்பட்டதனால் புகையிரதங்கள் நிறுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு புகையிரதங்களும் கிந்தோட்டை புகையிரத நிலையத்தில் மாறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மாத்தறை நோக்கி சென்ற புகையிரதம் அதற்குறிய சமிக்ஞயை கவனிக்காது முன்னோக்கி சென்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அதன்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சாரதிகள் இவ்வாறு சமிக்ஞைகளை கவனிக்காது ரயில்களைச் செலுத்துவதெல்லாம் புகையிரத திணைக்களத்திற்கும் பயணிகளுக்கும் நல்ல சமிக்ஞையாகத் தோன்றவில்லை.
ReplyDelete