Header Ads



இப்படியும் ஏமாற்றுகிறார்கள், இப்படியும் ஏமாறலாம் (2 உண்மைச் சம்பவங்கள்)

இறந்த காதலன் தனக்குள்ளே இருப்பதாக கூறி, குறித்த இளைஞனின் காதலியை மயானத்திற்கு கூட்டிச் சென்று ஆசிரியர் ஒருவர் துஸ்பிராகம் செய்த சம்பவம் மினுவாங்கொடையில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

15 வயதுடைய சிறுமியின் காதலன் என்று கூறப்படும் இளைஞன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியை மேலதிக வகுப்பில் சந்தித்த ஆசிரியர்,

இரவில் உன் காதலன் என் கனவில் வந்து தொல்லை செய்கிறான் எனவும், இரவில் உன்னை மயானத்திற்கு அழைத்து வருமாறு கட்டாயப்படுத்துகிறான் எனவும், இதனால் தூங்க முடியாமல் உள்ளதாகவும் அச்சிறுமியிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

ஆசிரியரின் சொல்வதை நம்பிய சிறுமி, அவருடன் மயானத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது சிறுமியின் காதலன் என்று கூறப்டும் இளைஞனை புதைத்த இடத்தில் உட்கார்ந்த ஆசிரியர், சிறிது நேரத்தில் தனக்குள் இறந்த இளைஞன் வந்துவிட்டதாக கூறி, “நீ எனக்கே சொந்தம்” எனக் கூறிக் கொண்டு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து வீடு வந்த சிறுமி சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துடன், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் பின்னர் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக தெரிவருகிறது.

2...............

திரு­கோ­ண­மலை, கிளி­வெட்டி பகு­தியில் இளம் பெண்­ணொரு­வரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளி­வெட்டி பகு­தியைச் சேர்ந்த ஒரு குழந்­தையின் தந்­தையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 25 வயதானவர் எனவும் அவர் 18 வயது பெண்ணொருவரின் கையைப்பிடித்தே இழுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் தனி­யாக இருந்த பெண்­ணிடம் குறித்த சந்தேகநபர் தண்ணீர் கேட்­டுள்ளார்.

குறித்த பெண் தண்ணீர் எடுக்க வீட்­டுக்குள் சென்ற சமயம் குறித்த இளைஞர் பின்­தொடர்ந்து சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

பின்பு குறித்த பெண் நடந்த சம்­ப­வத்தை பெற்­றோர்­க­ளிடம் தெரி­வித்­த­தை­ய­டுத்து பெற்­றோர் மூதூர் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்­துள்­ள­னர்

1 comment:

  1. இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கினால் நல்லம்? எங்கே பெண்ணுரிமைவாதிகளும், மனிதநேயர்களும்?இஸ்லாத்தில் தண்டனை கொடுமையானது என்கிறீர்கள் தானே . ஆகவே தண்டனையை நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.