Header Ads



இலங்கை 2 சமூக பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டியுள்ளது - ரணில்

-Gtn-

இலங்கையின் நன்கு கல்விகற்ற மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் விதத்தில் சீர்திருத்தங்களை துரிதப்படுத்துவதும், எங்களது பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதுமே எனது நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மன்றத்தின் வெப்தளத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் எதிர்காலம் என்ற தலைப்பிட்டு எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான  சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்வதற்கு இலங்கை முதலில் இரு சமூக பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டியுள்ளது.

முதலாவது நாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்   நல்லிணக்கத்தை புனர்வாழ்வை, புனர்நிர்மானத்தை ஊக்குவிக்கவேண்டியுள்ளது.

இரண்டாவது நாங்கள் இலங்கையின் ஜனநாயகத்தை பலப்படுத்தவேண்டியுள்ளது, நீதித்துறையின்சுதந்திரத்தை மீள ஏற்படுத்துவது,இலஞ்சத்திற்கு எதிரானபோராட்டத்தை முன்னெடுப்பது,சுதந்திரமான உயிhதுடிப்புள்ள ஊடகங்களை தழைப்பதற்கு அனுமதிப்பது போன்றவற்றின் மூலம் இதனை நாங்கள் ஏற்படுத்துகின்றோம்,

இது பொருளாதார அபிவிருத்திக்கான சரியான சூழமைவை ஏற்படுத்தும்,இலங்கையின் நன்கு கல்விகற்ற மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் விதத்தில் சீர்திருத்தங்களை துரிதப்படுத்துவதும்,எங்களது பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதுமே எனது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. So, what about BBS and it's ambitions????

    ReplyDelete
  2. mattu irachchi widayam iwarukku theriyatho

    ReplyDelete
  3. Rifkan Nawas BBS SLTJ இரண்டும் ஒன்றா?

    BBS முஸ்லீம்களை இரு பிரிவாக பார்க்கின்றது
    1.லேபல் முஸ்லீம்கள்.
    2.அடிப்படைவாத முஸ்லீம்கள்.

    முதல்வகையினர் மார்க்கவிடயங்களை சீர்தூக்கிப்பார்ப்பதில்லை தூய வழியில் இஸ்லாத்தை பின்பற்றுவதுமில்லை.
    இரண்டாவது வகையினர் தூயவழியில் இஸ்லாத்தை போதிப்பதுடன் பித்தலாட்டங்களிலிருந்து மக்களை தெளிவுபடுத்துகின்றதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

    இங்குதான் bbs முஸ்லீம்கள் தொடர்பில் அதிகப்பிரசங்கம் செய்கின்றனர்.
    சாமான்ய முஸ்லீம்களுடன் எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை...என்றும் அவர்களின் பிரச்சினைகளான
    1.ஷாரீஆ அடிப்படையிலான காதிநீதிமன்றம்.
    2.ஹலாலான உணவு
    3.மாற்றுமத்தினருக்கு இஸ்லாத்தை தெளிவுபடுத்துதல்
    4.பிறமொழியில் குர்ஆன் அச்சிடலும் வழங்குதலும்
    5.பிறமதத்தினரிடம் சென்று தாவா பணிபுரிதல்
    6.ஷிர்க்கை ஒழித்தல்
    ஆக இயக்கங்கள் மூலம் இஸ்லாத்தை வளர்த்தல் BBS இற்கு ஒரு சவாலான விடயமாகியுள்ளது.

    அவ்வாறு பார்த்தால் உங்களுக்கும் SLTJ சவால்?

    ReplyDelete

Powered by Blogger.