இந்த ஆண்டில், 2 தேர்தல்கள்..??
இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளதுடன், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.
புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு இந்த ஆண்டு பூர்த்தியாகும் முன்னதாக நடத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டுக்குள்ளேயே நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தெரிவுக்குழு ஒன்றின் ஊடாக இந்த யோசனைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றி அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
புதிய அரசியல் அமைப்பு அறிமுகம் செய்யப்படுவது உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த எவ்வித தடையும் ஏற்படுத்தாத என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் ஜூன் மாதத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியலமைப்பு குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா ஞாயிறு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
Post a Comment