Header Ads



பர்க்கினா பாசோ நாட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 25 பேர் பலி, 126 பேர் மீட்பு (படங்கள்)

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்க்கினா பாசோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து உணவு விடுதிக்குள் நுழைந்த பொலிசார், தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி சிறைபிடிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்று முன்னர் வெளியான தகவலில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 126 நபர்களையும் பொலிசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளையும் பொலிசார் சுட்டுகொன்றுவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பர்க்கினா பாசோவின் தலைநகரான Ouagadougou நகரில் ஸ்ப்லெண்டிட் என்ற நட்சத்திர ஹொட்டல் அமைந்துள்ளது.

இந்த ஹொட்டலில் வழக்கமாக ஐ.நா சபையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மேற்கத்திய தலைவர்கள் அடிக்கடி வருகை தருவார்கள்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் இந்த ஹொட்டலுக்குள் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய 3 தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்து அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிசார் தரப்பில் தற்போது கூறப்பட்ட செய்தியில், ஹொட்டலில் தாக்குதல் நடந்தபோது 100 முதல் 150 பேர் இருந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனினும், எதனால் இந்த தாக்குதலை நடத்தினர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. 

நள்ளிரவு நேரத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து, Ouagadougou தலைநகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த உணவு விடுதி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகாமை பகுதிகள் அனைத்தும் வெளிநாட்டினர் அதிகம் புழங்கும் இடம் என்பதால் அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.




No comments

Powered by Blogger.