Header Ads



நாட்டில் உள்ள அரச மருந்தகங்களை 24 மணி நேரமும் திறப்பதற்கு நடவடிக்கை

பொதுமக்களின் நன்மைக் கருதி நாடு பூராகவும் உள்ள அரச மருந்தகங்கள் 24 மணி நேரமும் திறத்திருப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் அரச மருந்தகங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியல் தற்போது 31 அரச மருந்தகங்கள் மட்டுமே காணப்படுவதாகவும் இதன் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிப்பதற்கு  திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்தில் அரச மருந்தகத்தை நிர்வகிக்கும் அரச மருந்தாக்கள் கூட்டுத்தாபனமானது அதிக இலாபத்தை பெற்றுக் கொண்டதாகவும் இந்த இலாபமானது 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது  438 மில்லியன் இலாபம் பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.