Header Ads



24 மணித்தியாலங்களில் 5 கொலைகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 05 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

மித்தெனிய, காரியமதித்த பிரதேசத்தில் 25 வயதுடைய யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கொலையை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்தப் பிரதேசத்தை அண்மித்த பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது அத தெரண செய்தியாளர் கூறினார். 

இதுதவிர குருணாகல், யடிவெஹரவத்தை தோட்டத்தில் காவலாளியாக பணிபுரியக் கூடிய ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்றிரவு 11.00 மணியளவில் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை வீரகெடிய, முருதவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் நின்ற வீட்டின் உரிமையாளர் மீது இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

நேற்றிரவு 11.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 32 வயதுடைய நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதுதவிர, திஸ்ஸமஹாராம, எகமுதுகம பிரதேசத்தில் கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த கணவன் 33 வயதுடைய தனது மனவியை கை, கால்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய கணவன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவை தவிர அவிஸ்ஸாவளை, சீதாவக பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அவிஸ்ஸாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

1 comment:

  1. இதைப்பற்றி பேச ஆளில்லை நாட்டில் நல்லாட்சி நாட்டில் நடந்தால் இவ்வாறு நடககுமா?

    ReplyDelete

Powered by Blogger.