Header Ads



21 இலங்கையர்களை கைதுசெய்ய, 181 நாடுகள் மூலம் சிகப்பு அறிக்கை

பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்ட 21 இலங்கையர்களை கைது செய்ய உதவுமாறு கோரி, சர்வதேச பொலிஸார் 181 நாடுகள் மூலம் சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நிதி மோசடிகளில் ஈடுபட்ட இவர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர்.

இவர்களில் 6 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் பிரதான நிறுவனங்கள் சிலவற்றின் முன்னாள் நிறைவேற்று அதிகாரிகள் மாத்திரமல்லாது சில வர்த்தகர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் இலங்கையில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பின் கீழ், சட்டவிரோத வர்த்தகங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஊடாக பாரியளவில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இவற்றுடன் தொடர்புடைய பலர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. இப்படி செய்திகள் இப்ப டாக்டர் எழுதும் மரந்து மாதிரி சாப்பாட்டுக்கு முன் பின் மாதிரி ஆஹி போச்சீஙக எங்கலுக்கு நோய் குணம் இல்லங்கோ

    ReplyDelete

Powered by Blogger.