அம்பாறையில் 201 முஸ்லிம் விவசாயிகள் நிர்க்கதி, உடனடி தலையீட்டுக்கு கோரிக்கை
அம்பாறை மாவட்டம் வட்டமடு பகுதியில் 50 ஏக்கர் நிலத்தில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட 201 முஸ்லிம் விவசாயிகள் நிர்க்கதி நிலையை அடைந்திருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த பகுதியில் விவசாயம் மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ள இந்த முஸ்லிம் விவசாயிகள், கடந்த காலங்களில் உரிய அனுமதிப் பத்திரங்களை பெற்றே விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று அதிகாரிகள் மேற்கொண்ட ஓருதலைப்பட்சமான நடவடிக்கை காரணமாகவே இந்த முஸ்லிம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தபட்டுள்ளது.
அம்பாறை அம்பாறை வட்டமடு பகுதிக்கு அண்மித்த பகுதியான கொட்டணை மற்றும் தீபமடு பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு எந்தவித தடையும் ஏற்படுத்தாத அக்கரைப்பற்று அதிகாரிகள், தமக்கு எதிராக செயற்பட்டமை குறித்தும் முஸ்லிம் விசாயிகள் தமது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று அதிகாரிகளின் செயற்பாட்டினால் பாதிப்படைந்த முஸ்லிம் விவசாயிகள் தமக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும், இதுதொடர்பில் சம்பந்தபட்டவர்கள் தமக்கு நீதியைத் பெற்றுத்தர வேண்டுமெனவும் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment