Header Ads



200 அடித்துவிட்டு, கேப்டன் பதவியை ராஜினாமா செய்த ஆம்லா - கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி


தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார் ஹாசிம் ஆம்லா. இன்று (06) முடிந்த இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்து போட்டியை டிரா செய்ய உதவிய நிலையில் இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"இது கடினமான முடிவு தான், இருப்பினும் எனக்கு நான் உண்மையானவனாக இருக்க விரும்புகின்றேன்" என்று அவர் தெரித்துள்ளார். ஆம்லா தலைமையில் தென்னாப்பிரிக்க அணி 14 போட்டியில் விளையாடி, நான்கில் வெற்றியும், நான்கில் தோல்வியும், ஆறு போட்டிகளை சமம் செய்தும் உள்ளது. நான்கு தோல்விகளும் மிக சமீபத்தில் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான மனிதர் என்ற பட்டத்திற்கு தக்கவாறு ஆம்லாவின் நடவடிக்கை அமைந்துள்ளதாக சமூக தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

2 comments:

Powered by Blogger.