முதலாம் வகுப்பிற்கு அனுமதி கிடைக்காத 2000 மாணவர்கள், வீடுகளில் முடக்கம்
முதலாம் வகுப்பிற்கு அனுமதி கிடைக்காத 2000கும் அதிகமான மாணவர்கள், வீடுகளில் இருப்பதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர், ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான தேசிய நிகழ்வு கடந்த 14ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வாறு 2000 மாணவர்களுக்கு முதலாம் தரத்திற்கான அனுமதி கிடைக்கவில்லை என கூறும் குற்றச்சாட்டை கல்வி அமைச்சர் அகிலவராஜ் காரியவசம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தேசிய பாடசாலைகளில் வாய்ப்பு கிடைக்காத போதும் தமது பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சிறந்த பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுப்பது தமது கடமையென கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment