Header Ads



தொழக்கூடாது என்ற விதியை எதிர்த்ததால், 200 முஸ்லிம் தொழிலாளர்கள் பணிநீக்கம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள இறைச்சியை கடைகளுக்கு தயார் செய்யும் ஒரு தொழிற்சாலையில், பணியிடத்தில் தாம் தொழக்கூடாது எனும் நோக்கில் விதிக்கப்பட்டதாக முஸ்லிம் பணியாளர்கள் நம்பும் புதிய விதிகளை எதிர்த்து அவர்கள் வெளியேறியதை அடுத்து, அந்த அவர்கள் இருநூறு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளன்னர்.

இவர்களில் பெரும்பான்மையானோர் சொமாலியாவிலிருந்து வந்த குடியேறிகள் ஆவர்.

'கார்கில் மீட் சொல்யூஷன்ஸ்' என்ற இந்த தொழிற்சாலையில் தொழுவதற்கு அதன் முஸ்லிம் தொழிலாளர்களுக்கு சில காலமாக அனுமதி இருந்து வந்ததாக அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சிலின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த தொழிற்சாலையில் பிரார்த்தனைக்கான இடம் இருந்தபோது, அது தொழிற்சாலையின் தேவைக்காக பயன்படுத்தப்படவேண்டி வந்தது என்று அந்த நிறுவனத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் தொழும் நேரம் பருவத்துக்கு ஏற்ப மாறுடும் என்பதை மேலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொமாலிய மனித உரிமைகளுக்கான ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Cargill Meat Solutions has Pork as well. Don't if these workers were handling pork as well in the factory. if they did then no point of talking about firing them for prayers. because we are not allowed to eat por but also to handle pork or sell, distribute etc...

    ReplyDelete

Powered by Blogger.