Header Ads



காதியானிகளால் இலங்கை முஸ்லிம்களுக்கு, பெரும் ஆபத்து - ரிஸ்வி முப்தி (பகுதி 1)

காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என சர்வதேச முஸ்லிம்களினலும் இலங்கை முஸ்லிம்களினாலும் வெளியிடப்பட்ட பிரகடனங்களின் தொகுப்புக்கள் அடங்கிய "அகமதிய ஜமாஅத்தினர் அல்லது காதியனிகள் ஏன் முஸ்லிம்கள் அல்லர்" என்ற நூல்  கடந்த ஞாயிற்றுக் கிழமை [17.01.2016] நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வெளியிடப்பட்டது. இந்த வைபவத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஆற்றிய உரையின் தொகுப்பு இங்கு வெளியிடப்படுகின்றது.

தொகுப்பு: - எம்.ஜே.எம். தாஜுதீன்

அன்புள்ள பெரியார்களே  சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்! இன்று எம் அனைவருக்கும் ஒரு வகையில் சந்தோசம் தரக்கூடிய நாளாகவூம் மற்றும் ஒரு வகையில் கவலை தரக்கூடிய நாளாகவூம் இருக்கின்றது. ஹஸரத் முகம்மது நபி (ஸல) அவர்களை இறுதி நபியாக ஏற்றுக்கொண்டு உலகில் வாழும் 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளனர் என்பதேயாகும். அவர்களில் அரசியல்வாதிகள்- துறைசார்ந்தோர்- சிவில் சமூகத்தினர் மற்றும் உலமக்கள் என அனைவரும் சகல வேறுபாடுகளையூம் மறந்து இறுதி நபித்துவத்தைக் காக்கும் இந்த முயற்சியில் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பாயிஸ் முஸ்தபா தலைமையில் சகல முஸ்லிம் சட்த்தரணிகளும்- தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதிப் படுத்தும் 21 முஸ்லிம் எம்.பிக்களும் இறுதி நபித்துவத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் உலமாக்களுடன் கைகோர்த்து நின்று ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். அதற்காக நாம் நன்றி கூறுவதோடு அவர்கள் அனைவருக்காகவூம் பிராh;த்திக்கிறௌம். இறுதி நபித்துவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கான முதலாவது அலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது- அதன் முதலாவது நடவடிக்கை நீர்கொழும்பில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும் என நீர்கொழும்பு பள்ளிவாசல் நிருவாகிகளும் பிரமுகர்களும் கோரிக்கை விடுத்து ஆர்வமூட்டினர். இது குறித்து நாம் மிகவூம் மகிழ்ச்சியடைகிறௌம். இந்த முயற்சி நல்லபடி நிறைவேறவேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கின்றௌம்.

கவலை தரக்கூடிய விடயம் என்னவென்றால்- 1000 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தினருடன் நல்லிணக்கமாக வாழ்ந்துவரும்போது இன்று முஸ்லிம் சமூகத்துக்கு  காதியானிகளால் ஏற்பட்டுள்ள சேதனையாகும். அல்லாஹ்வைப் பற்றியூம் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றியூம் நாம் ஏனைய சமூகத்தினருக்கு  எடுத்துக்கூறவேண்டிய காலகட்டத்தில் இப்படியான ஒரு சோதனை எமக்கு ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியது. காதியானிகள் திருக்குர்ஆனை சிங்கள மொழியில் பிழையாக மொழிபெயர்த்து அதனை அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கும் வழங்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து மூன்று நான்கு மாதங்களாக ஈடுபட்டுவருகின்றனர். இந்த நாட்டின் ஜனாதிபதி- பிரதமர்- எதிர்;க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் நீர்கொழும்பு மேயருக்கும் அவர்கள் சிங்களத்தில் மொழிபெயர்த்த குர்ஆனை வழங்கியூள்ளனர். இவர்கள்- தாம் பின்பற்றும் நபியெனக் கூறும் மிர்ஸா குலாம் அஹமது என்பவர்.1839 அல்லது 1840 ஆம் ஆண்டில் பிறந்து 1908ஆம் ஆண்டு ஒரு கழிவறையில் மரணித்தவராவார்.

இவர் நபிகள் நாயகம் (ஸல்) அர்களை எவ்வாறெல்லாம் இழிவூபடுத்த முடியூமோ அவ்வாரெல்லாம் தமது நூற்களில் இழிவூபடுத்தியூள்ளார். உதாரணத்துக்கு  ~றூஹானா  ….” என்ற நூலில் நான் முகம்துடைய றூகைப் பெற்றுள்ளேன். முகம்மதுடைய மனைவிமாரெல்லாம் எனது மனைவிமாராவார்” என்றும் மற்றொரு இடத்தில் “என்னை நபியென ஏற்காத முஸ்லிமகள் அனைவரும் விபசாரிகளுக்குப் பிறந்தவர்களாவார்” என்றும் கூறியூள்ளார். இந்த விவகாரத்தை பாகிஸ்தானிய முஸ்லிம்கள் 1974 ஆண்டு பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றனர். பின்னர் இரு தரப்பாரும் அழைக்கப்பட்டு இரவூ பகலாக விசாரணை நடைபெற்றது. இறுதியாக காதியானிகள் காபிர்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இது தொடர்பாக பாகிஸ்தானின் அப்போதைய ஜனாதிபதி ஸல்பிகார் அலி ப+ட்டோ உருது மொழியிலும் ஆங்கிலத்திலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகவூம் முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து முஸ்லிம் நாடுகள்- குறிப்பாக சவூதி அரேபியாஇ- மலேசியா மற்றும் மாலைதீவூ ஆகியன தமது நாட்டுக்குள் காதியானிகள் நுழைவதை முற்றாகத் தடை செய்தன. காதியானிகள் உங்களுக்குப் புதியவர்கள் அல்லர். அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நீண்டநாள் பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவே பலரதும் அயராத முயற்சியின் பின்னர் இன்று நாம் வெளியிடும் நூலை உருவாக்கியூள்ளோம். “லக்கும் தீனுக்கும் வலியதீன்”என்ற அடிப்படையில்  பௌத்தர்கள்- இந்துக்கள் மற்றும் கிரிஸ்தவர்கள் ஆகியோருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமயரீதியான பிரச்சினைகள் இல்லை. ஆனால் காதியானிகளோ மிகவூம் ஆபத்தானவர்கள். ஒரு போத்தலில் “ஸம்-ஸம்” என்ற லேபலை ஒட்டி அதில்; வைனை விற்பனை செய்தால் யாரால் சகித்துக்கொள்ள முடியூம்? உள்ளே நஞ்சை வைத்து இஸ்லாம் என்ற பெயரில் அதனை அறிமுகம் செய்தால் யார் பொறுத்துக்கொள்வார்கள்? மிர்சாகுலாம் தன்னை ஒரு நபி என்று வாதிட்டதுபோன்று தென் இலங்கையில் ஒருவர் தன்னை ~மைத்திரி புத்தர்” என பிரகடனப்டுத்தினார். இவரால் பௌத்த சமயத்துக்கு இழுக்கு ஏற்படக்கூடாதென்ற நோக்கில் அரசாங்கம் அவரின் பிரசார முயற்சிகளை முறியடித்தது.

நீர்கொழும்பில் வாழும் அஹமதிய ஜமாஅத்தினருக்கு ஒருஅன்பான வேண்டுகோள் விடுக்கறேன். பக்கத்தில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். எங்களிடம் வாருங்கள். இன்று நாம் வெளியிடும் புத்தகத்தை உங்களுக்குத் தருகின்றௌம். அதனை நன்கு வாசித்து விளங்கி உண்மையைப் புரிந்து தௌபா செய்து இஸ்லாத்தில் இணைந்துகொள்ளுங்கள். உங்களது ஈமான் மற்றும் மறுமை வாழ்வூ பற்றி கவலை கொண்டவனாக கூறுகிறேன். நீங்கள் எந்தக் கதவால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினீர்களோ அதே கதவால் மீண்டும் இஸ்லாத்தில் நுழைந்துவிடுங்கள். இந்த நீர்கொழும்புப் பிரதேசத்தில் பல காதியானிகள் தௌபா செய்து இஸ்லாத்தில் இணைந்துகொண்டுள்ளனர். அதேபோன்று இலங்கையின் ஏனைய பாகங்களிலும் பல காதியானிகள் தௌபா செய்து இஸ்லாத்தில் இணைந்தார்கள். பாகிஸ்தானிய கவிஞர் அல்லாமா இக்பால்கூட ஒரு காலத்தில் காதியானி கொள்கைகளால் கவரப்பட்டு காதியானியாக மாறினார். எனினும் தகுந்த உலமாக்களிடம் அவர் விளக்கம் பெற்றதும் 1935 ஆம் ஆண்டு அந்தக் கொள்கைளை விட்டும் தௌபா செய்து மீண்டும் இஸ்லாத்தில் இணைந்துகொண்டார். அந்த நேரம் அவர் நேருவூக்கு எழுதிய கடிதம் மிகவூம் முக்கியமானதாகும். அதை இன்றைய அரசியல்வாதிகள் கட்டாயம் படிக்கவேண்டும்.

பகுதி 2

http://www.jaffnamuslim.com/2016/01/blog-post_517.html



No comments

Powered by Blogger.